விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் நடித்த வேதநாயகம் இன்று காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பாபு சிவன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் வேட்டைக்காரன்.
இந்த படத்தில் அனுஷ்கா, சலீம் கவுஸ், சஞ்சிதா படுகோனே, சத்யன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் வேதநாயகம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் வில்லனாக மிரட்டி இருந்தவர் சலீம் கவுஸ். அதிலும் வேதநாயகம் என்றால் பயம் என்று இவர் சொன்ன டயலாக் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது. அந்த அளவிற்கு பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சலீம் கவுஸ்.
சலீம் கவுஸ் பற்றிய தகவல்:
மேலும், இவர் மும்பையை சேர்ந்தவர். ஆனால், இவர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் தான் பிறந்தவர். இவர் சுத்தமான தமிழன் ஆவார். வெற்றிவேல் படத்தின் மூலம் ஜிந்தா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சலீம் கவுஸ். முதல் படத்திலேயே தன்னுடைய அட்டகாசமான நடிப்பாலும், வித்தியாசமான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர் படத்திலும் சக்கரை கவுண்டர் ஆக நடித்திருப்பார் சலீம் கவுஸ்.
சலீம் கவுஸ் நடித்த படங்கள்:
அதனைத் தொடர்ந்து இவர் வெற்றி விழா, சீமான், மகுடம், தர்மசீலன், திருடா திருடா, சாணக்கியா, ரெட், விஜய்யுடன் வேட்டைக்காரன் என பல படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் கமல், பிரபு, விஜய்,அஜித் என தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் இவர் தமிழ்மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். பெரும்பாலும் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தானாகவே போய் வாய்ப்பு கேட்பதில்லை.
விஜய் பட நடிகர் காலமானார்:
இந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணி இயக்குனர்கள் அழைத்தால் மட்டுமே நடிப்பாராம். இந்நிலையில் நடிகர் சலீம் கவுஸ் காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. நடிகர் சலீம் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எந்த காரணம்? எந்த நோயால்? எப்போது இறந்தார்? என்ற தகவல் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை.
சலீம் இறந்த செய்தி:
இவருடைய மரணச் செய்தி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வில்லத்தனமான சிரிப்பு, வில்லனுக்கு உண்டான உடல்மொழியை கொண்ட நடிகரை தமிழ் சினிமா இழந்து இருக்கிறது.