அந்த படத்தால் பெரிய நஷ்டம் நஷ்டமாகி ஒரு ஒன்றரை வருஷம் என் வாழ்க்கையே சூனியமாக இருந்தது – மனம் திறந்த ஹீரோ சந்தானம்.

0
714
santhanam
- Advertisement -

தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை குறித்து முதன் முதலாக மனம் திறந்து சந்தானம் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் நகைச்சுவை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் இவர் முதலில் குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
santhanam

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்தார். இவர் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். ஆனால், சில ஆண்டுகளாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் குலு குலு. இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை .

- Advertisement -

சந்தானம் நடிக்கும் படம்:

தற்போது சந்தானம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை அடுத்து கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் கிக் என்ற படத்திலும் சந்தானம் நடித்து முடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல சேனலிடம் சந்தானம் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், சினிமாவில் நான் நிறையவே கற்றுக் கொண்டேன். இன்னும் கத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஹீரோவாக படங்கள் பண்ண ஆரம்பித்த பிறகு சினிமா நிறைய கத்துக் கொடுத்திருக்கு. தில்லுக்கு துட்டு முன்னாடி சினிமா எனக்கு அவ்வளவாக தெரியாது. அந்த படம் செம ஹிட் ஆச்சு. அப்போ உடனே மூணு தயாரிப்பாளர்கள் வந்து என்னை மூன்று படங்களுக்கு புக் பண்ணினார்கள்.

வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள்:

மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும். இந்த மூன்று பட சூட்டிங்கும் தொடங்கியது. அதற்கு பிறகு மூன்று பேருமே இல்லாத பிரச்சனைகளை சொல்லி அப்படியே விட்டுட்டு ஓடிட்டாங்க. அதற்கு பிறகு ஒரு ஒன்றரை வருடம் என் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து இருந்தேன். என்ன பண்ணனும் என்று கூட எனக்கு தெரியவில்லை. அதற்கு பிறகு தான் சக்க போடு போடு ராஜா பண்ணினேன். அதுவும் பிளாப் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு என் கதை முடிஞ்சிருச்சு என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. அப்பா அந்த மூன்று படங்களுமே வெளியாகவில்லை. ரிலீசான படமும் ஹிட் கொடுக்கவில்லை. பயங்கரம் மன அழுத்தத்தில் இருந்தேன். மீண்டும் போராட ஆரம்பித்தேன். அந்தப் போராட்டத்தில் வந்தது தான் தில்லுக்கு துட்டு 2.

-விளம்பரம்-

படம் விற்பனை குறித்து சொன்னது:

கடவுள் அருளால் மீண்டும் படம் வெற்றி பெற்றது. இத்தனை வருஷம் அனுபவத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த சினிமா உலகில் நிறைய சிக்கல்கள் இருக்குது என்று புரிய வைத்தது. ஒருத்தர் படத்தை வாங்கி உடனே இன்னொருத்தர் கிட்ட விற்கிறது கிடையாது. அது எங்எங்கேயோ போய் யார்கிட்ட இருக்குதுன்னு கூட தெரியாமல் ஆகிவிடும். படத்தை சரியான ஆட்கள் கிட்ட விற்கணும். படத்தை வாங்கினவர்கள் அதை சரியா ரிலீஸ் பண்ணிடுவாங்களா என்று பார்த்து விற்கணும். சினிமாவில் லாபமோ நஷ்டமோ ஒரு படம் பண்றோம் என்றால் அதை சரியா பண்ணிடனும். நல்ல தொழிலான சினிமாவை சூதாட்டம் மாதிரி விளையாடினால் அது எல்லாருடைய வாழ்க்கையும் ஸ்பாயில் ஆக்கிவிடும்.

சினிமா நிலைமை:

எனக்கு அப்ப அந்த மூன்று படங்கள் ரிலீஸ் ஆகாமல் அதில் சம்பளமும் சரியாக கிடைக்காமல் அதற்கு பிறகு ஒரு படம் எடுத்து அதுவும் பெரிய நஷ்டமாகி ஒரு ஒன்றரை வருஷம் என் வாழ்க்கையே சூனியமாக இருந்தது. மம்மி படம் மாதிரி நான் மீண்டும் எழுந்து வந்தேன். அதற்கு பிறகு தான் தயாரிப்பாளர்களை எப்படி தேர்ந்தெடுக்கணும் என்று சினிமாவை புரிந்து கொண்டேன். நம்மளை நம்பி 100 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வருபவர்களை திருப்திப்படுத்தினால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்று யார் நினைக்கிறார்களோ அவர்களால் தான் சினிமாவில் கடைசி வரையும் நிலைக்க முடியும் என்று சந்தானம் கூறியிருந்தார்.

Advertisement