ப்பா, முதன் முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சந்தானம்.

0
3032
santhanam

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். தற்போது நடிகர் சந்தானத்தின் மகனும் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. காலகாலமாக சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பது வழக்கமான ஒன்று தானே. அந்த வகையில் நடிகர் சந்தானமும் சினிமா உலகில் தன் மகனை களம் இறக்குகிறார் என்ற தகவல் கூட வெளியானது.

தமிழ் சினிமா உலகிற்கு காமெடி நடிகனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தனம்.இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். மேலும், இவருடைய நகைச்சுவைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார். ஆரம்பத்தில் இவருடைய சில படங்கள் தோல்வியில் முடிவடைந்தாலும் விடா முயற்சியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ,ஏ1 போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது. சமீபத்தில் கூட சந்தானத்தின் நடிப்பில் ‘பிஸ்கோத்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய படம்

இந்த படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடித்துள்ளார் என்று செய்திகள் வெளியானது ஆனால், இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது அப்படி எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் நடிகர் சந்தனாம் தனது மகனுடன் கிருஷ்ணா ஜெயந்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement