சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியானாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சந்தானம். சந்தானத்தைப் பொறுத்தவரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

அதன் பின் சந்தானத்தை வெள்ளி திரைக்கு அழைத்து வந்தவர் நடிகர் சிம்பு தான். தனது ‘மன்மதன்’ படத்தின் மூலம் சந்தானத்தை சினிமாவில் சிம்பு அறிமுகம் செய்து வைத்தார். அதுமட்டுமில்லாமல், சந்தானத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பேசி சிம்பு வாங்கிக் கொடுத்தார்.
பின் சந்தானம் பிரபலமான காமெடி நடிகர் ஆனார். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார்.
சந்தானம் குறித்த தகவல்:
அதன் பின் சமீப காலமாக சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். அதோடு தமிழ் சினிமாவில் காமெடியனாக கொடி கட்டி பறந்த சந்தானம் சில ஆண்டுகளாக கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் சந்தானம் காமெடியனாக நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியானது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருக்கவேண்டிய இப்படம் சில பிரச்சனைகளால் வெளியாகாமலே இருந்தது.

டிடி நெக்ஸ்ட் லெவல்:
இந்த படம் பொங்கலுக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய படத்தில் சந்தானத்துடன் இணைந்து விஷால், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்க படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தில் சந்தானம் அண்ட் கோவுடன் கௌதமேனன், செல்வராகவன் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 16-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

படத்திற்கு தடை:
அதன் பின் படத்தினுடைய பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதில் சந்தானம் சிம்பு குறித்தும் தன்னுடைய படங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதாவது, ஆர்.கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை வெளியிடக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.

நீதிமன்றம் சொன்னது:
அந்த மனுவில், இனித்த படத்தினுடைய தலைப்பு இதற்கு முன்பு ஆர்.கே என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படங்களின் உடைய தொடர்ச்சி. இதற்காக எங்களிடம் அனுமதி பெறாமல் இந்த தலைப்பை பட குழுவினர் பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். இதை எடுத்து நீதிமன்றம், இந்த மனுவிற்கு பதிலளிக்கும்படி டிடி நெக்ஸ்ட் லெவல் படக் குழுவினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இதனால் இந்த படத்தினுடைய ரீலிசில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. படம் வெளிவருமா? என்றும் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது






