தனது நண்பரின் உடலை தோலில் சுமந்து சென்ற சந்தானம். நெகிழ்ச்சியான வீடியோ.

0
42954
sethuraman
- Advertisement -

தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன் நேற்று (மார்ச் 26) இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன்.

-விளம்பரம்-

டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார். இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.

இதையும் பாருங்க : முதலமைச்சரை விளக்கம் கொடுக்க சொன்ன வாலிபர். போலீஸ் ஸ்டேஷனில் விளக்கிய காவல் துறை.

- Advertisement -

டாக்டர் சேதுவின் இந்த திடீர் மறைவு திரை துறையில் உள்ள பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். சேதுவின் மரணம் குறித்து சமூக வலைதளத்தில் தனது வருத்தத்தை கூறியுள்ள நடிகர் சந்தானம், என்னுடைய நண்பர் சேதுவின் மரண செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் மன அழுத்தத்துடனும் உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

இவர்கள் மட்டுமல்ல சேதுவின் மரணம் குறித்து சமூக வலைதளத்தில் இரங்கலை தெரிவித்துள்ள அனைவரும் சேது மிகவும் ஒரு நல் உள்ளம் கொண்ட மனிதர் என்று தான் தங்களது வருத்தத்தை கூறி வருகின்றனர். நடிகை குஷ்பூ சேதுவின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்ததோடு, ட்விட்டரில் சேதுவின் புகைப்படத்தை வைத்துள்ளார்.

இதையும் பாருங்க : மக்களை காப்பற்றும் 37 டாக்டர்களின் உயிரைப் பறித்த கொரோனா. செய்வதறியாது தினறும் அரசு.

-விளம்பரம்-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் தற்போது 144 தடை உத்தரவு பின்பற்றிவரப்படுகிறது. இதனால் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிலையில் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தனது நண்பரின் உடலை சுமந்து செல்கிறார் சந்தானம்.

Advertisement