சர்வதேச அளவில் இந்த கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசினால் 21 ஆயிரத்திற்கும் மேல் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 642 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. முதன் முதலாக இந்த கொரோனா வைரஸ் சீனாவில் தான் பரவ தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உலக நாடுகள் அனைத்தும் இந்த கரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். மேலும், இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தான். சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய அரசாங்கம், காவல்துறை அதிகாரிகள்,மருத்துவர்கள் என பல பேர் தங்களுடைய குடும்பங்களை மறந்தும், உயிரை பணய வைத்தும் இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தன் கடமையை செய்யும் போலீஸ் அதிகாரியிடம் திமிராக நடந்து உள்ளார் வாலிபர் ஒருவர். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் காட்டுத் தீயாய்ப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கூறியிருப்பது,
யாருமே வெளியில் வரக்கூடாது என்றால் நீங்களும் தான் வரக்கூடாது. ஏன் வெளியில் வந்தீர்கள் என்று அந்த வாலிபர் போலீசிடம் கேட்டுள்ளார். அதற்கு காவல்துறையினர் இதை முதலமைச்சரிடம் கேளுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு அந்த வாலிபர் முதலமைச்சரை இங்கே வரச் சொல்லுங்கள். இது என் ஊர், என் கோட்டை இங்கே வரச் சொல்லுங்கள். அவர் ஓட்டு கேட்பதற்கு மட்டும் இங்கே வருகிறார் இல்லை. இப்ப இங்கே வர அவரை சொல்லுங்கள்.
முதலமைச்சர் எனக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். உரிமை மறுக்கப்படும் போது அயல்நாட்டில் அடிமையாக படுகிறார்கள். இங்க வர சொல்லுங்கள் முதலமைச்சரை. ஏன் எதற்கு எப்படி எங்கே எப்போது என்ற பல கேள்விகளுக்கு அவர் எனக்கு பதில் அளிக்க வேண்டும் முதலமைச்சர் என்று கூறினார். பின் அந்த வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அந்த வாலிபனுக்கு தடியடி நன்றாக விழுந்து உள்ளது. அதற்கு பின் நான் வெளியே வர மாட்டேன், வெளியே வந்தாலும் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வருவேன். இந்த மாதிரி முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேச மாட்டேன் என்று அந்த வாலிபர் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேலும், அதிக காய்ச்சல், அதிக இருமல், மூச்சுத்திணறல் இவையெல்லாம் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸின் பரவுதலை தடுக்க உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலர் போராடி வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.