மக்களை காப்பற்றும் 37 டாக்டர்களின் உயிரைப் பறித்த கொரோனா. செய்வதறியாது தினறும் அரசு.

0
3581
corona
- Advertisement -

ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வைத்து இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது இந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

Watch: Cuban doctors arrive in Italy to fight coronavirus, get a ...

- Advertisement -

இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிப்படைந்து உள்ளது இத்தாலி நாடு தான். ஒரே மாதத்தில் 6 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.

இதையும் பாருங்க :ரொம்ப பயமா இருக்கு, தயவு செஞ்சி வெளிய வராதீங்க. கண்கலங்கி கேட்டுக்கொண்ட வடிவேலு.

கொரோனா பாதிப்பை குறைக்க இத்தாலி மருத்துவர்களுக்கு உதவி புரியும் வகையில் கியூபா மருத்துவர்களும் இத்தாலி சென்று உள்ளனர். கொரோனாவினால் பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் இத்தாலியில் படிப்படியாக இறப்பு விகிதம் குறைய தொடங்கியுள்ளது. 21ஆம் தேதி 793 பேர் பலியாகினர். 22ஆம் தேதி 651 பேர், 23 ஆம் தேதி 601 என்று படிப்படியாக இறப்பு விகிதம் குறைய தொடங்கி இருந்தது.

-விளம்பரம்-

ஆனால் தற்போது வரை இத்தாலியில் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தொட்டுள்ளது. மக்களை கொன்று குவித்து வரும் இந்த கொடிய வைரஸ் மருத்துவர்களையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 6205 மருத்துவ ஊழியர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 37 டாக்டர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று (மார்ச் 26) மட்டும் 3 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்காக பல ஆயிரம் டாக்டர்களும் செவிலியர்களும் இத்தாலியில் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், தற்போது அவர்களுக்கும் இந்த நோய் பரவி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து போய் இருக்கிறது இத்தாலி அரசு. மேலும், கொரோனா வைரஸ் தாக்கிய செவிலியர் ஒருவர் மற்றவர்களுக்கு தன்னால் பரவக்கூடாது என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான்.

Advertisement