66 வயதிலும் கட்டுஸமஸ்தாக இருந்த சரத் குமாருக்கு கொரோனா – தந்தை நிலை குறித்து சொன்ன வரலக்ஷ்மி.

0
974
sarat
- Advertisement -

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சமீபத்தில் கூட வசந்த் அண்ட் கோ உரிமையாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் உயிரிழந்தார்.

- Advertisement -

அதே போல தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த்னர். இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகரான சரத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக அவரது மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

அப்பாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் ஹைத்ராபாத்தில் இருக்கிறார், குணமாகி வருகிறார். அவரை பற்றி தொடர்ந்து தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement