சாதிய படங்கள் தொடர்பான கேள்விக்கு நடிகர் சரத்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சரத்குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கி கொண்டு வருகிறார். இவர் சினிமாவை தாண்டி அரசியல்வாதியாகவும் கலக்கி வருகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சரத்குமாரிடம் பைசன் படம் பற்றியும், மாரி செல்வராஜ் ஜாதி படங்கள் எடுப்பதை பற்றியும் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதோடு நாட்டாமையும் ஜாதி படம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதனால் கொந்தளித்த சரத்குமார், நாட்டாமை ஜாதி படமா? பஞ்சாயத்து பண்றவங்க ஜாதியா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறார். அவ்வளவுதான் அதில் ஜாதி இருக்கிறது என்று சொல்ல முடியாது.
சரத்குமார் பேட்டி:
தேவர் மகன் படம் அந்த இடத்தில் நடந்ததால் அந்த பெயரை வைத்திருக்கிறார்கள். மற்றபடி அதில் எந்த ஒரு ஜாதியையும் சொல்லவில்லை. அதனால் இந்த படங்களை எல்லாம் ஜாதி படங்கள் என்று சொல்ல முடியாது. அதோடு மாரி செல்வராஜை பற்றி எல்லோரும் சொன்ன கருத்துக்களை வைத்து சொல்கிறேன். இவர் நடந்த நிகழ்வுகளில் அழுத்தமாக இருந்த சில விஷயங்களை பற்றி தான் படத்தில் சொல்லி இருக்கிறார். அதனால் ஜாதி படம் என்று சொல்ல முடியாது. நிகழ்வுகளை தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=Ai0wQsU9G4c
நாட்டாமை படம் பற்றி சொன்னது:
அதில் ஒன்றும் தவறு இல்லை. மக்களின் பொழுது போக்கிற்காக தான் எல்லோருமே படம் எடுக்கிறார்கள் குற்றம் என்று பார்த்தால் நம்மால் படமே எடுக்க முடியாது. என்னை பொருத்தவரை இன்றைக்கு எல்லோருமே சமத்துவமாக இருக்க வேண்டும் என்று சொல்பவன். ஜாதியை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா? என்று கேட்டால் ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை அதிக அழுத்தமாக சொல்ல வேண்டிய தேவை இல்லை.

மாரி செல்வராஜ் படங்கள்:
ஹாலிவுட் படங்களில் கருப்பின மக்களின் துன்பங்களைப் பற்றி எல்லாம் பேசினார்கள். இது பழைய காலங்களில் நடந்த நிகழ்வுகள். ஆனால், இப்போது அது நடக்கக்கூடாது என்று படம் எடுப்பதில் தவறு இல்லை. நடந்ததை நடந்ததாக சொல்ல வேண்டி இருக்கிறது. இங்கு எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டுக்கொண்டு ஒருங்கிணைந்து இருக்கிறோம். சகிப்புத்தன்மை வளர்த்துக்கொண்டு எல்லோருக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்ற இடத்தில் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது என்று கூறி இருக்கிறார்.






