பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரவணன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சிகள் பரவலாக பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பல்வேறு நபர்கள் உயிரிந்துள்ளனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே சேலத்தை சேர்ந்த நடிகர் சரவணன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தி வீரன், கடைகுட்டி சிங்கம் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தொடர் காய்ச்சல் காரணமாக கடந்த 3 நாட்களாக அந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்த போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
தற்போது நடிகர் சரவணன், மருத்துவனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து பேட்டியளித்துள்ள நடிகர் சரவணன், தீபாவளி பண்டிகை அன்று எனக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோதுபன்றி காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். தற்போது காய்ச்சல் குறைந்துள்ள நிலையில் விரைவில் பூரண குணமடைந்து படப்பிடிப்புக்கு செல்வேன்.