கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமடைந்தது என்பது தெரியும். அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி தொடங்கி 3 நாட்கள் தான் ஆகிறது ஆனால், அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சியை கலாய்த்து பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகர் பொன்னம்பலத்தை காமெடி நடிகர் சதீஷ் கலாய்த்துள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ளனர். அதில் மக்களுக்கு மிகவும் பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம் தான். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைத்த முதல் நாளே இவர் நடித்த படங்களை வைத்து இவரை கலாய்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நாட்டாமை படத்தில் வரும் இவரது கதாபாத்திரத்தை ஒப்பிட்டு தான் இவரை கலாய்த்து வருகின்றனர்.
Naattaamai Muththu kittaye sanda pottu samaalicha neenga… ipdi rendu ponnunga Potta saththaththula saanjittingale ponnambalam ayya…???
— Sathish (@actorsathish) June 20, 2018
இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிக் பாஸ் போட்டியாளர்கள் இடையே ஒரு சின்ன வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பொன்னம்பலம் எந்த வம்புக்கும் செல்லாமல் தனியாக அமர்ந்திருந்தார் இதனை கிண்டல் செய்யும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள சதீஷ், நாட்டாமை கூட சண்ட போட்ட நீங்க,ரெண்டு பொண்ணுங்க போட்ட சத்தத்துள சாஞ்சீடீங்களே அய்யா’ என்று கிண்டல் செய்துள்ளார்.