சத்யராஜ் கோயமுத்தூரை சேர்ந்தவர். இவருக்கு சிபிராஜ் என்ற ஒரு மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் திவ்யா அப்படி இல்லை. சின்ன வயதில் படங்களில் நடிக்க ஆசை பட்டாலும் பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார் திவ்யா.தனது அப்பாவினை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவர் சத்தியராஜ் மகள் திவ்யா. நியூட்ரிஷன் துறையில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்பெரன்ஸ் நடத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் புதிய புரட்சியை ஏற்ப்படுத்தும் வகையிலான ஒரு திட்டத்தை நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ் முன்னெடுத்து செல்ல உள்ளார். இதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒப்புதல் பெற்ற நிலையில், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திவ்யா சத்யராஜின் திட்டத்திற்கு கிரீன் சிக்னல் காண்பித்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் பல இலட்சம் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இன்றி, பல்வேறு விதமான உடல்நல குறைவுக்கு ஆளாகினர். அது போன்ற ஒரு கொடுமையான சூழலில் இருந்து வரும் குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ‘அட்சயப் பாத்திரம்’ என்ற அறக்கட்டளையின் மூலமாக தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கிவிட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் ராகியினால் செய்யப்பட்ட உணவும், ராகி கலந்த பாலும் காலை உணவாக வழங்கப்படும்.குழந்தைகளின் உடல்நலத்திற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் ‘அட்சயப் பாத்திரம்’ அறக்கட்டளை மூலமாக இந்த திட்டத்தினை இன்றி வெற்றிகரமாக செயல்படுத்த போவதாக திவ்யா சத்யராஜ் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் திவ்யா, தனது அப்பாவின் அம்மா மற்றும் அம்மாவின் அம்மா புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.





