தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள்.

அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சி சார்பில் 234 தொகுதிகளும் நிற்கப்போகும் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். மேலும், விஜய் அவர்கள் ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். இதை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள்.
தேர்தல் முடிவுகள்:
இப்படி இருக்கும் நிலையில் நேற்று தேர்தலின் முடிவுகள் வெளியானது. 75 வருட திமுக, 50 வருட அதிமுக என எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருக்கிறது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் ஒரு தனி மனிதன் தேர்தலில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம் என்று எல்லோருமே பாராட்டி வருகிறார்கள்.

தவெக வெற்றி:
அது மட்டும் இல்லாமல் கொளத்தூர் தொகுதியில் நின்ற ஸ்டாலினையும் தவெக வேட்பாளர் பாபு தோற்கடித்திருக்கிறார். இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் திமுக கட்சியின் தீவிர ஆதரவாளரும் நடிகருமான சத்யராஜ் அவர்கள் விஜய்க்கு வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், விஜய் அவர்களுக்கும் தவெக எம்எல்ஏக்கமும் தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சத்யராஜ் வீடியோ:
தங்களுடைய கொள்கை வீரர்கள், தந்தை பெரியார் அம்பேத்கர் என்று விஜய் கூறியிருந்தார். அவர்கள் வழி நின்று ஒரு சிறப்பான சமூக நீதி ஆட்சி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அன்பு சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலினின் தோல்விக்கு உண்மையிலேயே மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆனால், அவர் தோல்வியை கண்டு துவண்டு விடுபவர் அல்ல.
https://www.youtube.com/watch?v=-zdDmwuRZpA
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாநகர அரசின், டெல்லிக்கு அஞ்சாமை என்ற நிலைப்பாட்டில் நின்று பல வளர்ச்சி நலத்திட்டங்களை கொண்டு வந்து இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருந்ததற்கு என்னுடைய நன்றியை கூறிக்கொண்டு அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் என்னுடைய ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்று பெருமையோடு மன உறுதியோடு கூறிக் கொள்கிறேன்






