வீசு, இப்போ வீசி – 66 வயதிலும் சிலம்பம் சுற்றி அசத்தும் சத்யராஜ் – வைரலாகும் வீடியோ.

0
665
sathya
- Advertisement -

“கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டவர். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்குமே தெரிந்தது. கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தார்.

-விளம்பரம்-

தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். “என் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே, என்னம்மா கண்ணு, தகடு தகடு” என்ற வசனங்களால் இன்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறார். 80 காலகட்டத்தில் இருந்த பெரும்பாலான நடிகர்கள் சிலம்பம் மற்றும் சண்டை பயிற்சி எடுத்தவர்கள் தான்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் ரம்யா பாண்டியனின் சகோதரி கீர்த்தி – அக்காவ ஓவர் டேக் பண்ணிட்டாங்க.

- Advertisement -

ஆனால், அப்போது ஜிம் எல்லாம் பெரிதாக கிடையாது. அப்படி இருக்கும் போதே சரத்குமார், அர்ஜுன், கமல், சத்யராஜ் ஆகியோர் தங்கள் உடலை படு பிட்டாக வைத்து இருந்தனர். இதில் சரத் குமாருக்கு அடுத்தபடியாக 80 காலகட்டத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தது சத்யராஜ் தான். மேலும், இவரிடம் எம் ஜி ஆர் கொடுத்த கர்லா கட்டை கூட இருக்கிறது.

தற்போது இவருக்கு 66 வயதாகிறது. 66 வயது ஆனாலும் சத்தியராஜ் இன்னும் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். இந்த வயதிலும் தொடர்ந்து உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் மொட்டை மாடியில் சிலம்பம் சுற்றி அசத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இது பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது இது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement