பிரேக்கிங் நியூஸ் : நடிகர் சத்யராஜ் மருத்துவமனையில் திடீர் அனுமதி.

0
406
sathyaraj
- Advertisement -

நடிகர் சத்யராஜ், இயக்குனர் ப்ரியதர்ஷன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மூன்று வருடங்களாகவே கொரோனாவின் தாக்கம் இந்தியாவை விட்டு செல்லவில்லை. இதனால் லட்சக்கண மக்கள் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகிறார்கள். கொரோனா தாக்கத்தால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

-விளம்பரம்-

தற்போது இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டது. மேலும், மக்கள் கோவிட் தடுப்பூசி போட்டும், முக கவசம் அணிந்தும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாகவும், முக கவசமும் அணிவதை நிறுத்த கூடாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் நடமாட கூடாது என்றும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஊரடங்கு என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

கொரோனா பரவல்:

அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் கொரோனா குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தற்போது கொரோனா மாற்றமாக டெல்டா வைரஸ், ஓமைக்காரன் என்று பல மாற்றம் அடைந்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட கமலஹாசன், வடிவேலு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து விட்டார்கள்.

கொரோனா பாதித்த நடிகர்கள்:

அதேபோல் மகேஷ் பாபு, அருண் விஜய், திரிஷா, மீனா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன் உட்பட பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் சத்யராஜ்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சத்யராஜ் குறித்து இதுவரை எந்த தகவலையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

-விளம்பரம்-

கொரோனா பாதித்த நடிகர்களுக்கு தீவிர சிகிச்சை:

இவரைப்போலவே இயக்குனர் பிரியதர்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி நாளுக்கு நாள் கொரோனாவின் ருத்ரதாண்டவம் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். மேலும், கொரோனாவின் இரண்டாவது அலை முடிவடைந்து மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது அலை தொடங்கி இருப்பதால் அனைவரும் கவலையிலும் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் ஆறுதல்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமானவர்களாக திகழ்பவர்கள் சத்யராஜ், பிரியதர்சன். இருவருடைய படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. தற்போது இவர்கள் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் நிலையில் கொரனோ தொற்று உறுதியாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

Advertisement