பழுவேட்டரையரா, தொல்காப்பியரா – வைரலாகும் சீமானின் புகைப்படம். உண்மை என்ன ?

0
1646
seeman
- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பரீட்சயமானவர். சீமான் அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் அரசியலில் குதித்து விட்டார். தற்போது சீமான் அவர்கள் முழு நேர அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார். இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்தி வருகிறார். இவர் சோசியல் மீடியாவின் சர்ச்சை நாயகன்.

-விளம்பரம்-
Seeman

இவர் போடும் கூட்டங்களில் எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவிற்கு எதாவது ஒரு விஷயத்தை பேசி விட்டு சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை கிளம்புவார். நடந்து முடிந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இருப்பினும் 90 சதவீத இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கிய நிலையில் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

இதையும் பாருங்க : முந்தானை முடிச்சி படத்தில் அ ஆ சொல்லித்தந்த டீச்சரா இது ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

என்னதான் நாம் தமிழர் கட்சி பின்னிலை வகித்து வந்தாலும் முந்தைய தேர்தல்களுக்கும் சமீபத்தில் நடந்த தேர்தல்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கனிச்சாக உயர்ந்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நாம் தமிழர் கட்சி 2010ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2011 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கட்சி போட்டியிடவில்லை முதன்முதலாக கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தான் நாம் தமிழர் கட்சி தேர்தல்களம் கண்டது. அந்த தேர்தலில் நான்காவது அணியாக களம் கண்டது இந்த கட்சி.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கூட நாம் தமிழர் கட்சி மூன்றாம் அணியாக வந்தது. தீவிர அரசியலில் ஈடுபடத்தில் இருந்து சீமான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இப்படி ஒரு நிலையில் சீமான், ராஜா கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், பழுவேட்டையர் வேடம் என்றும் தொல்காப்பியர் வேடம் என்று கூறி வருகின்றனர்.ஆனால், உண்மையில் வேலு பிரபாகரனின் இயக்கத்தில் வெளியாகவிருந்த ஒரு திரைப்படத்தின் போட்டோ ஷூட் தான் இது.

-விளம்பரம்-
Kadavul 2 Movie Launch Stills – TamilNext

1997 ஆம் ஆண்டு வேலு பிரபாகரன் இயக்கத்தில் வெளியான ‘கடவுள் ‘ படத்தில் மணிவண்ணன், ரோஜா, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு கடவுள் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதாக இருந்தார் வேலு பிரபாகரன். அந்தத் திரைப்படத்தில் நரகாசுரன் கதாபாத்திரத்தில் சீமான் நடிப்பதற்காக போட்டோ ஷீட் செய்யப்பட்ட படங்கள்தான் இது.

Advertisement