பிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா, ஆரவ் டிப்ஸோட சென்றார்.! ரகசியம் சொல்லும் சென்றாயன் மனைவி

0
1669
Actor-senrayan
- Advertisement -

நடிகர் சென்றாயன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளதைத் தொடர்ந்து அவரது மனைவி கயல்விழியிடம் பேசினோம்.பிக் பாஸ் ஃபீவர் ஆரம்பித்துவிட்டது. நடிகர்கள், பாடகர்கள், காமெடியன்கள் என பதினாறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டார்கள். அதில், காமெடி நடிகர் சென்றாயனும் ஒருவர். சென்றாயன் மனைவி கயல்விழியிடம் பேசினோம்.

-விளம்பரம்-

senrayan

- Advertisement -

“சென்றாயன் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கார். எப்படி ஃபீல் பண்றீங்க?”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடந்த சீஸன்லேயே பிக் பாஸ் போட்டியில கலந்துக்கிற வாய்ப்பு வந்தது. ஆனா, என்ன மாதிரியான ரீச் இருக்கும்னு தெரியாததுனால அவர் போகலை. முதல் சீஸனுக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸைப் பார்த்துட்டு, இந்த முறை வாய்ப்பு கிடைச்சா, கண்டிப்பா போகணும்னு சொன்னார். வாய்ப்பு கிடைச்சது. உடனே ஓகே சொல்லிட்டார். கண்டிப்பா அவர் பிக் பாஸ்ல ஜெயிப்பார்னு நம்புறேன்.”

-விளம்பரம்-

“சென்றாயனும் நீங்களும் பிக் பாஸ் முதல் சீஸனைப் பார்த்திருக்கீங்களா?”

“நான் முழு நிகழ்ச்சியையும் பார்த்தேன். அவருக்கு ஷூட்டிங் இருந்தாலும், நிகழ்ச்சியில நடந்ததை போன் பண்ணி சொல்லிடுவேன். நாங்க ரெண்டுபேரும் ஓவியா ஆர்மி. ஓவியாவை ஜெயிக்கவைக்க மத்தவங்க போனை வாங்கி ஓவியாவுக்கு ஓட்டு போட்டோம்.”

actor senrayan

“என்னென்ன அட்வைஸ் கொடுத்து அனுப்பிவெச்சீங்க?”

“யாரையும் கார்னர் பண்ணக்கூடாது, அடுத்தவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும், மத்தவங்க உங்களைக் கார்னர் பண்ணாலும் கண்டுக்காம விட்டுடணும். முக்கியமா, சாப்பாட்டைக் குறை சொல்லக் கூடாது. ஏன்னா, அவர் என் சமையலைக் குறை சொல்லிக்கிட்டே இருப்பார்.”

`பிக் பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி, வேற யார்கிட்டேயாவது டிப்ஸ் கேட்டாரா?”

“பிக் பாஸ்ல செலக்ட் ஆனதும், ஓவியாவுக்குப் போன் பண்ணோம். ‘மூடர்கூடம்’ படத்துல இருந்தே அவரும் ஓவியாவும் நல்ல நண்பர்கள். நானும் அடிக்கடி அவங்ககிட்ட பேசியிருக்கேன். `ஜாலியா போயிட்டு வாங்க’னு ஓவியா சொன்னாங்க. ஆரவ் சார்கிட்டேயும் பேசினோம். ‘மத்தவங்களுக்காக உங்களை மாத்திக்காம, நீங்க நீங்களாவே இருங்க’னு சொன்னார்.”

“சென்றாயனோட கேரக்டர்கள்ல எது எது பிக் பாஸ் வீட்டுல அவருக்கு உதவும்?”

“எல்லோர்கிட்டேயும் அட்ஜஸ்ட் பண்ணிப் போயிடுவார். சட்டுனு கோபப்படுற ஆள் கிடையாது. அவருக்கு ஏதாவது தெரியலைனா, மத்தவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுப்பார். இவருக்கு இங்கிலீஷ் பேச வராது. பிக் பாஸ் வீட்டுல இருந்து திரும்பும்போது, அதைக் கத்துக்கிட்டு வருவார்னு நினைக்கிறேன். ரொம்ப வெகுளியான ஆள். எனக்கு அவர்கிட்ட பிடிச்சதே, அவரோட இன்னொசென்ட்தான்!.”

senrayan

“பிக் பாஸ் வீட்டுக்குள்ள சென்றாயனுக்கு யாரெல்லாம் சப்போர்ட்டா இருப்பாங்கனு நினைக்கிறீங்க?”

“நடிகை ஜனனியும் டேனியல் அண்ணனும் அவருக்கு ஆதரவா இருப்பாங்கனு நினைக்கிறேன். காரணம், ஜனனிகூட ‘உல்டா’னு ஒரு படம் நடிச்சிருக்கார். டேனியல் அண்ணன் ஏற்கெனவே அவருக்கு நண்பர்தான்!.”

“சென்றாயனைக் கடந்த பிக் பாஸ் போட்டியாளர்களோடு ஒப்பிடணும்னா, யாரோட ஒப்பிடுவீங்க?”

“வையாபுரி சாரோட ஒப்பிடலாம். ஏன்னா, இவர் குடும்பம்னு வந்துட்டா, ரொம்ப பாசம் காட்டுவார். நாங்க காதல் திருமணம் பண்ணிக்கிட்டோம். இதுவரை அவர் இத்தனை நாள் என்னை விட்டுப் பிரிஞ்சதில்லை. வீட்டுல இருந்து கெளம்பும்போது, ‘அம்மா அப்பாவை பத்திரமா பார்த்துக்கோ’னு சொல்லிட்டுப் போனார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமா அவருக்கு நிறைய படங்கள்ல நடிக்கிற வாய்ப்பும், மக்கள்கிட்ட நல்ல பேரும் கிடைக்கும்னு நினைக்கிறேன். இதைத் தவிர வேற என்ன வேணும் எங்களுக்கு?!” என்கிறார், கயல்விழி.

Advertisement