பட வாய்ப்புகள் இல்லாததால் செந்திலுக்கு வந்த பரிதாப நிலை.! இவருக்கா இந்த நிலை.!

0
6545
senthil
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த சிலர் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ற விலாசம் தெரியாமல் போயிருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறை ரசிகர்களை கடந்து தற்போது ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகமாக இருந்து வருபவர் நடிகர் செந்தில் தான். 80ஸ் காலகட்டம் முதல் தற்போது இருக்கும் வரை இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Related image

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் செந்தில் – கவுண்டமணி ஆகிய இரனண்டு பேரையும் எப்போதும் மறக்க முடியாது. இருவரையும் ஸ்க்ரீனில் ஒரு சேர பார்த்து விட்டால் சிரிப்பு தானாக வந்துவிடும். அப்படி ஒரு இணை இருவரும். கிட்டத்தட்ட 15 வருடங்கள் தனியாக தமிழ் சினிமாவின் காமெடி டிபார்ட்மென்ட்டை கவனித்துக் கொண்டனர்.

இதையும் பாருங்க : லாஸ்லியாவை தள்ளிவிட்ட சாண்டி.! கடுப்பாகி சாண்டியிடம் வாக்கு வாதம் செய்த கவின்.!

- Advertisement -

இவருடம் சேர்ந்து ராமராஜனின் கரகாட்டக்காரன் படத்தில் செய்த காமெடியை இண்று வரை ரசிக்கின்றனர் மக்கள். 13 வயது இருக்கும் போது ஏதோ குறும்பு செய்துவிட கோபித்துக்கொண்டு பஸ் ஏறி சென்னை வந்து சினிமாவில் உள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழைந்தவர் தான் செந்தில். பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் செந்தில் தற்போது சீரியலில் வந்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ராசாத்தி’ என்ற தொடரில் நடித்து வருகிறார் செந்தில். இதே தொடரில் செந்திலுடன் பல படங்களில் நடித்த விசித்ராவும் நடித்து வருகிறார். இந்த தொடர் வரும் 23 ஆம் தேதி துவங்க இருகிறது. ஒரு கால கட்டத்தில் பிசியாக இருந்த நடிகர் தற்போது சீரியலில் வந்துள்ளதை கண்டு ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement