செந்திலுடன் பிறந்த 6 பேர். இப்போ இத்தனை பேர் மட்டும் தான் இருக்காங்க – செந்திலின் உடன் பிறந்த தங்கையை பார்த்துளீர்களா ? (குரல் கூட அப்படியே இருக்கே)

0
672
Senthil
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எவர் கிரீன் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். சினிமா உலகில் நகைச்சுவை பார்ட்னர்ஸ் என்று கேட்டாலே சின்ன குழந்தை கூட கவுண்டமணி– செந்தில் என்று தான் சொல்லும். தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி– செந்தில் காம்போ தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-
பட வாய்ப்புகள் இல்லாததால் செந்திலுக்கு வந்த பரிதாப நிலை.! இவருக்கா இந்த  நிலை.! - Tamil Behind Talkies

இவர்களுடைய காமெடிக்கு அடிச்சுக்க இன்னும் யாரும் வரவில்லை என்று தான் சொல்லணும். அப்போதெல்லாம் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும். மேலும், நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் முதன் முதலாக மதுபான கடையில் தான் பணிபுரிந்தார். பின் நாடகங்களில் சேர்ந்து நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார். அதற்கு பிறகு வெளியான மலையூர் மம்முட்டியான் என்ற படம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

செந்திலின் குடும்பம் பற்றய தகவல்:

பின் 1984 ஆம் ஆண்டு நடிகர் செந்தில் அவர்கள் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவர். இவர் சொந்தமாக சாலிகிராமத்தில் தான் மருத்துவமனையை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார் என்று குறிப்பிடத்தக்கது. இந்த படம் பூஜை எல்லாம் போட்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படம் அப்படியே நின்றுவிட்டது.

செந்தில் குமாரின் தங்கை முனீஸ்வரி அளித்த பேட்டி:

இன்னொரு மகன் சினிமாட்டோகிராபி படித்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் செந்தில் குமாரின் தங்கை முனீஸ்வரி அவர்கள் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் நடிகர் செந்தில் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய பெயர் முனீஸ்வரி. நான் செந்தில் அண்ணாவின் மூன்றாவது தங்கை. மொத்தம் நாங்கள் ஏழு பேர். மூன்று ஆண்கள் 4 பெண்கள். அதில் அண்ணாக்கள் மூன்று பேர், என்னுடைய அக்கா இரண்டு பேர், எனக்கு இளையவள் ஒருத்தி இருக்கிறாள். இப்போ அதில் எங்கள் செந்தில் அண்ணா, நானும், என்னுடைய தங்கை மட்டும் தான் இருக்கிறோம். மீதிப் பேர் இறந்து விட்டார்கள்.

-விளம்பரம்-

செந்தில் தங்கை முனீஸ்வரியின் குடும்பம்:

அதேபோல் எனக்கு 2 மகன்கள், ஒரு மகள். அதில் மகள் புற்றுநோயால் இறந்து விட்டார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். என்னுடைய கணவர், இரண்டு மகன்கள் மூவருமே சவூதியில் வேலை பார்த்து வருகிறார்கள். செந்தில் அண்ணாவும் திருவிழா, விசேஷம் என்றால் ஊருக்கு வந்து எங்களை பார்த்து விட்டு செல்வார். அதே போல் நாங்களும் விசேஷம் என்றால் அவருடைய வீட்டிற்குப் போவோம். நல்லபடியாக தான் அவர் எங்களை பார்த்துக் கொள்கிறார். நான் பிறப்பதற்கு முன்பே செந்தில் அண்ணா சென்னைக்கு சென்றுவிட்டார். அதற்கு பிறகு தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். எனக்கும், அண்ணாவுக்கும் 15 வருடம் வித்யாசம் இருக்கு. அவருடைய படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

செந்தில் பெயர் வர காரணம்:

அதிலும் கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரைத்தவிர சூரி, சந்தானம், கவுண்டமணி போன்ற பல கலைஞர்களையும் பிடிக்கும். மேலும், என் அண்ணாவிற்கு செந்தில் என்ற பெயர் வந்ததற்கு காரணம் என்னவென்றால், என்னுடைய அண்ணாவின் பெயர் முனிசாமி. குலதெய்வம் பெயர். நான் பிறப்பதற்கு முன் என்னுடைய அண்ணா பஸ் நடுவில் விழுந்து விட்டார். இருந்தும் அவர் உயிர் தப்பித்தார். அந்த பஸ்ஸை வைத்திருந்தவர் செந்தில் குமார். அதனால் செந்தில் பஸ்ஸிலேயே உயிர் பிழைத்து விட்டான் என்று எல்லோருமே செந்தில் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதே பெயரைத் தான் சினிமாவிற்கு வந்தது என்று செந்தில் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Advertisement