கர்லிங் ஹேர், படு மாடர்ன் உடை – ஆளே மாறிய செந்தில். புகைப்படம் உள்ளே.

0
55813
senthil
- Advertisement -

தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக், சூரி, யோகி பாபு என்று எத்தனையோ காமெடியன்கள் வந்தாலும் காமெடி ஜாம்பவான்கள் என்றால் செந்தில் – கௌண்டமணி தான். தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் செந்தில் – கவுண்டமணி ஆகிய இரனண்டு பேரையும் எப்போதும் மறக்க முடியாது. இருவரையும் ஸ்க்ரீனில் ஒரு சேர பார்த்து விட்டால் சிரிப்பு தானாக வந்துவிடும். தற்போது வரை இவர்கள் காம்போவை மிஞ்ச யாரும் இல்லை.

-விளம்பரம்-

அப்படி ஒரு இணை இருவரும். கிட்டத்தட்ட 15 வருடங்கள் தனியாக தமிழ் சினிமாவின் காமெடி டிபார்ட்மென்ட்டை கவனித்துக் கொண்டனர். இவருடம் சேர்ந்து ராமராஜனின் கரகாட்டக்காரன் படத்தில் செய்த காமெடியை இண்று வரை ரசிக்கின்றனர் மக்கள். இதில் செந்தில் எப்படி சினிமாவிற்கு வந்தார் தெரியுமா? செந்தில் இராமனாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர். இவரது வீட்டில் அப்பா மளிகை கடை வைத்திருப்பவர். சிறு வயதில் நிறைய குறும்புகள் செய்வாராம் செந்தில்.

- Advertisement -

13 வயது இருக்கும் போது ஏதோ குறும்பு செய்துவிட்டார் என செந்திலின் அப்பா திட்டியுள்ளார், இதனால் கோபித்துக்கொண்டு பஸ் ஏறி சென்னை வந்துவிட்டார் செந்தில். அப்போது நடிப்பில் சிறிது ஆரவம் இருந்துள்ளது. ஆனால், எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் பல கடைகளில் தினக் கூலிக்கு வேலை செய்துள்ளார் செந்தில். அதில் கிடைத்த சில நண்பர்களின் மூலம் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அந்த நாடங்களில் கிடைத்த பல சினிமா பிரபலங்களை வைத்து சினிமாவிற்குள் நுழைந்துள்ளார் செந்தில். அதிலும் அவர் முதலில் நடித்தது ஒரு மலையாள படத்தில்.

பின்னர் தான் கவுண்டமனி – செந்தில் என்ற கமெடி கலாட்டா. இப்போதும் கவுண்டமனி அண்ணனுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அவர் எனக்கு எப்போதும் அண்ணன் தான் என ஒரு பேட்டியில் இவற்றை எல்லாம் நெகிழ்வுடன் கூறினார் செந்தில். இப்படி ஒரு நிலையில் நடிகர் செந்தில் பிளாக் ஷீப் ஆரம்பிக்கவுள்ள ஆப் ஒன்றின் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதற்காக வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement