சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டேன்- உருக்கமான சேசுவின் கடைசி பேச்சு வீடியோ

0
547
- Advertisement -

மறைந்த நடிகர் லொள்ளு சபா சேசுவின் கடைசி பேச்சு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் சேசு இறப்பு குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக இருந்தவர் லொள்ளு சபா சேசு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சேசு.

-விளம்பரம்-

இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதற்கு பின் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பூமர் அங்கிள், ராயர் பரம்பரை போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.

- Advertisement -

மருத்துவமனையில் அனுமதி :

இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவர் பூசாரி கதாபாத்திரத்தில் பரதநாட்டியம் ஆடி அசத்தி இருப்பார். படத்தில் அவருடைய காமெடியும், பரதநாட்டியமும் வைரலாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சேசு மரணம்:

பின் இவர் விரைவில் குணமடைந்து வருவார் என்று கூறப்பட்டது. மேலும், கடந்த சில தினங்களாகவே இவர் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தான் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி நடிகர் சேசு காலமாகி விட்டார். இவருடைய மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இவருடைய மறைவிற்கு இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சேசுவின் கடைசி பேச்சு வீடியோ:

இந்த நிலையில் சேசுவின் கடைசி பேச்சு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சேசு, நான் என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன். சமீபத்தில் கூட ஒரு 10 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்திருந்தேன். கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்தால் அவருடைய வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்று நினைப்பேன். இது மட்டும் தான் நிறைய பேருக்கு உதவி அளிக்கிறேன்.

சேசு செய்த உதவி:

காரணம், இந்த நிலைமையில் நானும் நிறைய இருந்திருக்கிறேன். அவர்களுடைய வலி என்ன என்பது எனக்கு தெரியும். அதையெல்லாம் அனுபவித்து தான் வந்திருக்கிறேன். சாப்பாடு கூட வழியில்லாமல் இருந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களையும் சந்தித்தேன் என்று எமோஷனலாக கண்ணீருடன் பேசி இருந்தார். மேலும், இவர் மிக்ஸாம் புயல் போது சேசு வீட்டில் இருந்த லட்சம் மதிப்புள்ள பல பொருட்கள் அடித்து செல்லப்பட்டது. இருந்தாலும், தன்னோட அந்த ஏரியாவில் உள்ள ஏரியாகிவில் கஷ்டப்பட்ட பல குடும்பங்களுக்கு சேசு உதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement