படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சண்முக பாண்டியன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தை யாராலும் மறக்க முடியாது. அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். மேலும், கேப்டன் மறைவு அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்து இருக்கிறது. இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

அதில் இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து உள்ளார்.
இவர் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சகாப்தம்’. இந்த படத்தில் தான் விஜயகாந்த் கடைசியாக நடித்திருந்தார். இதனை அடுத்து சண்முக பாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் சில வருடங்களுக்கு முன் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய மகன் சண்முக பாண்டியன் உடன் சேர்ந்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.
படைத்தலைவன் படம்:
இந்த படம் வரலாறு கதையை மையாக வைத்து எடுக்கப்பட இருந்ததால் விஜயகாந்த் மன்னன் வேடத்தில் நடிப்பதாக இருந்தார். இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கினார்கள். ஆனால், விஜயகாந்த்தினுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியாதல் இந்த படம் நின்று விட்டது. சிறிய இடைவெளிக்கு பின் தற்போது சண்முகபாண்டியன் அவர்கள் ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கும்கி படத்தை போல யானை சம்மந்தப்பட்ட படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

படம் குறித்த தகவல்:
இந்தப் படத்தை வால்டர், ரேக்ளா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். முதலில் இந்தப் படத்தின் கதையை விஜயகாந்த் தான் கேட்டிருக்கிறார். அவர்தான் ‘படைத்தலைவன்’ படத்தை எடுங்கள் நன்றாக இருக்கும் என்றெல்லாம் ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தாராம். தன்னுடைய அப்பாவின் ஆசைக்காகவே இந்த படத்தை ஆக்ரோஷமாக சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார்.

இசைவெளியீட்டு விழா:
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சசிகுமார், ஏ.ஆர். முருகதாஸ், கஸ்தூரிராஜா ஆகியோருடன் பட குழுவினரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், இந்த படம் என் மனதிற்கு ரொம்பவே நெருக்கமான படம். காரணம், என்னுடைய அப்பா இருக்கும்போது இந்த படத்தினுடைய கதையை கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டை காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=5YChb6Hnp_w
சண்முக பாண்டியன் சொன்னது:
இதனால்தான் இந்த படம் எனக்கு ரொம்ப நெருக்கமான படம். படைத்தவன் படத்தை கும்கி அல்லது வேறு எந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கவே முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைகளத்தை கொண்டது. என்னுடைய முதல் ஷாட்டை ஐந்து யானைகளுடன் தான் எடுக்கப்பட்டது. எல்லோருமே என் அப்பா மாதிரி நான் இருப்பதாக சொன்னார்கள். ஆனால், எனக்கு அப்படி தெரியவில்லை. இந்த படத்திற்காக நான் முடிந்தவரை உழைத்திருக்கிறேன். இந்த படம் எடுக்கும்போது படப்பிடிப்பில் பல்வேறு சவால்களையும் சந்தித்தேன். ஆனால், இந்த படத்தின் மூலம் பல விஷயங்களை நானும் இயக்குனர் அன்பும் கற்றுக் கொண்டோம். மேலும், மே 21ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. நிச்சயம் இந்த படம் குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.






