திடீரென நின்ற பீஸ்ட் பட நடிகரின் திருமணம், காரணம் இது தான்- அவரே சொன்ன தகவல்

0
321
- Advertisement -

திடீரென பீஸ்ட் பட நடிகரின் திருமணம் நின்று போன தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பொதுவாக ஒரு ஹிட் படம் கொடுத்தால் அடுத்த படம் பிளாப் ஆகிவிடும் என்பது தான் விஜய்யின் சமீப கால ராசியாக இருந்து வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார் விஜய்.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் தீவிரவாதிகளில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் சைன் டாம் சாக்கோ.

- Advertisement -

சைன் டாம் சாக்கோ குறித்த தகவல்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சைன் டாம் சாக்கோ திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமா உலகில் நுழைந்து ஆரம்ப காலத்தில் துணை இயக்குனராக தான் பணியாற்றி இருந்தார். அதற்கு பிறகு படங்களில் நடித்து வந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தான் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது பீஸ்ட் படத்தின் மூலம் தான்.

சைன் டாம் சாக்கோ காதல்:

அதற்குப் பின் இவர் மலையாள மொழியில் வெளியாகி இருந்த தல்லுமலா என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கன்னூர் ஸ்குவாட் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், கடந்த ஆண்டு நானி நடிப்பில் வெளியாகி இருந்த தசரா படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதற்கிடையில் இவர் தனுஷா என்ற மாடலிங் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.

-விளம்பரம்-

நின்று போன திருமணம்:

கடந்த ஆண்டுதான் இவருக்கும் தனுஷாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின் இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வைரலாகி இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் கூட இவர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் சைன் டாம் சாக்கோ திருமணம் நின்றுவிட்ட தகவல் தான் வெளியாகி இருக்கிறது.

பிரிவுக்கான காரணம்:

மேலும், இது தொடர்பாக தனுஷா பேட்டியில், எனக்கும் சாக்கோவுக்கும் இடையே பிரேக்கப் ஆகிவிட்டது. அதனால், எங்களுடைய திருமணம் நடைபெறாது. நாங்கள் இருவரும் காதலித்தது உண்மைதான். ஆனால், அந்த காதல் டாக்ஸிக்காக மாறியதால் விலகி விட்டோம். காதல், குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வராததால் தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். நடிப்பையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து நாங்கள் காதலித்தோம். அதற்குப் பிறகுதான் அது செட்டாகாது என்று தெரிந்து கொண்டு நாங்கள் இந்த முடிவை எடுத்தோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement