இந்நிலையில் தற்போது சின்னத்திரையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் டிவி-யில் குழந்தைகள் பங்குபெறும் 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் சிவா.
அகில உலக சூப்பர்ஸ்டார், சிவாவின் கிண்டலான பேச்சுக்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மிர்ச்சி எஃப்.எம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானதால் மிர்ச்சி சிவா என்றே அழைக்கப்படுகிறார். 'அகில உலக சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்தால் அழைக்கப்படுபவர்.
குழந்தைகளுக்கான புது நிகழ்ச்சியாக வெளிவரவுள்ள இந்நிகழ்ச்சி முற்றிலும் புதிதான ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் இந்த நிகழ்ச்சியில் மார்க் போடுவதும் எலிமினேஷனும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




