புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விவசாயி..!உதவி செய்ததோடு ஆசை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்..!

0
201
Shivakarthikeyan

தமிழகத்தில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார். ஆம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

Siva

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர் நெல் ஜெயராமன்.

பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்கி சந்தைப்படுத்தி சாதனை செய்த இவரது சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் விருது மற்றும் தமிழக அரசின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.தன்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் பார்த்த சிவகார்த்திகேயனை நேரில் சந்திக்க விரும்பியதாக கத்துக்குட்டி படத்தின் இயக்குநர் சரவணனிடம் நெல் ஜெயராமல் கூறியிருக்கிறார். இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயராமனை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.