15 லட்சம் கடன்..!டாக்டர் படிக்க அக்கா பட்ட கஷ்டம்..!உருக்கமுடன் பேசிய சிவகார்த்திகேயன்..!

0
1047
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இதுவரை சிவகார்த்திகேயன் பல விருது வழங்கும் விழாவில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் எந்த ஒரு மேடையில் விருதை வாங்கினாலும் எந்த மறைந்த தந்தையை பற்றி பேசாமலும் இருந்தது இல்லை.ஆனால், இதுவரை அவரது தாய் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டது கிடையாது.

- Advertisement -

அதே போல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அக்கா இருப்பதும் கொஞ்ச நாள் முன்பேய் அனைவருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ள சிவா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தார்.

இந்த பேட்டியில் அவரது அக்காவும் வந்திருந்தார். அப்போது பேசிய சிவா, என்னுடைய அக்கா டாக்டர் ஆக வேண்டும் என்று எனது அப்பா 15 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். அப்போது அட்மிஷன்காக கல்லூரி வரை எனது அப்பாவும் அக்காவும் சென்றுவிட்டனர்.

-விளம்பரம்-

ஆனால், அங்கு என்னுடைய அக்கா எனது அப்பாவிடம் நான் அடுத்த வருடம் ஒழுங்காக படித்து மெரிடில் சேர்ந்து விடுகிறேன் என்று சொல்லிட்டால்.ஆனால், அவள் சொன்னது போலவே அடுத்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தால். இதனால் நாங்கள் 15 லட்ச ரூபாய் கடனிலிருந்து தப்பினோம். ஆனால், அதன் பின்னர் சிறுது காலத்தில் என் அப்பா இறந்து விட்டார். என் அப்பாவிற்கு நான் எதுவும் செய்தது இல்லை ஆனால், என் அக்கா என் அப்பாவை பெருமைப்பட வைத்துள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisement