2-வது முறையாக மனைவியை திருமணம் செய்த நடிகர் – இஸ்லாம் முறைபடி சகோதரிக்கு சொத்துக்கள் செல்லக்கூடாது என்பதற்காக இப்படி செய்தாரா ?

0
360
shukoor
- Advertisement -

கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகர் தன்னுடைய மனைவியை இரண்டாவது திருமனம் செய்து கொண்டது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. “நா தான் கேஸ் கொடு” என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் மற்றும் வழக்கறினாரான சி.சுக்கூர். இவர் அந்த படத்தில் வழக்கறினராகவே நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவரது மனைவி ஷீனா மகாத்மா காந்தி பல்கலை கழகத்தில் முன்னாள் துணை வேந்தராக இருந்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 29 ஆண்டுகள் ஆனா நிலையில் 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தான் இவர் இரண்டாவது முறையாக தன்னுடைய மனைவியை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் நேற்று மகளீர் தினத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் சாட்சியாக அவரது மகள்களே கையெழுத்து போட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் சி. சுக்கூரின் இந்த செயலுக்கு சன்னி உயர் கல்வி மையம் கண்டணங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

2வது முறை திருமணம் :

முஸ்லீம் தனி நபர் சட்டப்படி அவர் இஸ்லாமை அவமதிப்பு செய்துள்ளதாகவும். 2வது திருமணம் ஒரு நாடகத்திற்காக நடத்தப்பட்டுள்ளது என்றும், தன்னுடைய மரணத்திற்கு பிறகு தன்னுடைய சொத்துக்கள் மூன்றில் ஒரு பங்கு சகோதரர்களுக்கு சென்று விடக்கூடாது என்ற கூறுகிற மனப்பான்மையினால் தான் நடிகர் சுக்கூர் இப்படி செய்துள்ளார் என தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது.

திருமணத்திற்கு எதிர்ப்பு :

அதாவது இந்திய முஸ்லீம் சட்டத்தின் படி மூஸ்லீம் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாத நிலையில் அவர்களது மொத்த சொத்தில் மூன்றும் இரண்டு பங்கு மட்டும் தான் அவரது மகள்களுக்கு செல்லும். மீதமுள்ள சொத்து சுக்கூரின் சகோதர்களுக்கு செல்லும். இருந்த போதிலும் இந்த விஷயம் குறித்து சுக்கூர் தன்னுடைய முடிவு எந்த மத நம்பிகைகளையும் அவமதிப்பு செய்வதற்கான நோக்கம் கிடையாது என்றும், நான் இப்படி செய்வதற்கு எந்த காரணமும் கிடையாது என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் நடிகர் சுக்கூர் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

ரசூல் பூக்குட்டி :

சுக்கூரின் இந்த முடிவுக்கு மக்களிடையே எதிர்ப்பும், ஆதரவும் கிடைத்து வரும் நிலையில் இது தொடர்பாக பிரபல இசையமைப்பாளர் ராகுல் பூக்குட்டி போட்டிருந்த பதிவில் “சக்கூர் நடித்த ‘நா தான் கேஸ் கொடு’ என்ற படத்தில் இருந்து இவரின் நடிப்பையும் இவரையும் பிடித்து விட்டது. சமுதாயத்திற்கு விழிப்புணர்பு ஏற்படுத்தும் செயலாக இவரது இரண்டாவது திருமணம் இருக்கிறது. இவரது 2வது திருமணத்தில் என்னால் அவருடன் இருக்க முடியவில்லை, ஆனால் அவரின் இந்த முடிவுக்கு நான் துணையாக இருக்கிறேன். உங்களது புதிய மனைவிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுளளார்.

Advertisement