இத்தனை கோடிக்கு ஒரு காரா.! நடிகர் சித்தார்த் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

0
1116
Siddharth
- Advertisement -

சினிமா நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை அவர்கள் பயன்படுத்தும் கார் மதிப்பு எப்போதும் கோடிக்கணக்கில் தான் இருக்கும். ஆனால் சமீபத்தில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காரின் விலை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் சித்தார்த். அதன் பின்னர் ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் nh , ஜிகர்தண்டா போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் அடிக்கடி சமூக பிரச்சினைகள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் இந்திய எல்லையில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் போது கூட பாகிஸ்தானை எதிர்த்து தனது கருத்தை வெளியிட்டிருந்தார் நடிகர் சித்தார்த்.

சமீபத்தில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார், அதில் உலகின் மிக உயர்ந்த காரின் புகைப்படத்தை பதிவிட்டு, கொஞ்சம் யோசித்து பாருங்க 150 கோடி பாதிப்புள்ள இந்த காரின் சைடில் ஆட்டோ எதாவது கீறல் போட்டா என்ன ஆகும். ஐயோ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இத்தனை கோடிக்கு கூட கார் இருக்கிறதா என்று ஷாக் அடைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement