விஜய் படம் மட்டும் ஸ்பெஷலா ! விஜய் 62 பட ஷூட்டிங் மட்டும் எப்படி நடக்குது ! பிரபல நடிகர் அதிரடி

0
1138
Actor siddharth
- Advertisement -

தமிழ் சினிமாவில் தயரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்ததை அறிவித்ததுடன் இனிமேல் எந்த ஒரு புதிய படமும் வெளிவராது என்று தெரிவித்துள்ளனர். இதனால் பல படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்னேற்ற தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தாங்கள் நினைத்த நேரத்தில் படத்தை முடிக்க முடியவில்லை என்று வருத்தத்தில் உள்ளனர்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆனால் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடந்து வந்தது.இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சதீஷ் முதன் முதலில் தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்தார்.இதனை தொடர்ந்து நடிகர் கருணாகரனும் ட்விட்டரில் விஜய் படப்பிடிப்பு நடந்ததை கிண்டல் செய்திருந்தார்.

இதனையடுத்து ஜிகர்தண்டா, ஜில் ஜங் ஜக் போன்ற படங்களில் நடித்த நடிகர் சித்தார்த் விஜய் படத்தின் ஷூட்டிங் நடந்ததற்கு ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள டீவீட்டில”சினிமா துறையில் அனைத்து படங்களும் சமம். ஒருவருக்கு மட்டும் சிறப்பு சலுகை அளித்தால் மற்றவர்களுக்கும் அந்த சலுகையை அளிக்க வேண்டும் இங்கு அனைவரும் சமம் .சமத்துவமும்,ஒற்றுமையும் இல்லாமல் இருக்கும் இந்த நிலையை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் மற்றும் ஒரு பதிவில் இது தான் தமிழக அரசு, தமிழ் சினிமாவை பற்றி ஒரு போதும் அக்கரைக்கொண்டதில்லை.இதனை அவர்கள் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகின்றனர். ஒருவேலை அதிசயம் ஏதாவது நடந்தால் தான் அரசு சினிமாவின் பக்கம் கவனத்தை திருப்புவார்களோ என்னவோ. முதலில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வருத்தமும் தெரிவித்துள்ளார்

Advertisement