தமிழர்கள் தமிழர் அல்ல ! ஆன்டி இந்தியன் ! இது நம்மக்கு அவமானம் ! நடிகர் சித்தார்த் விளாசல்

0
1532
Actor Siddharth

காவேரி மேலாண்மை பிரச்சனையில் பலரும் போராடி வரும் நிலையில் .மேலும் இரு தினங்களுக்கு முன்னர் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடிய ipl போட்டியின் போது போராட்டம் வெடித்தது இதனால் சென்னை ஆடவிருந்த எல்லா போட்டிகளும் புனேவிற்கு மற்றப்பட்டுல்லது.

மேலும் காவேரி மேலாண்மை அமைக்ககோரி பல்வேறு பிரபலங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்ற நிலையில். தற்போது பிரபல நடிகர் சித்தார்த் காவேரி மேலாண்மை அமைப்பது குறித்து பிரதமர் மோடியை ட்விட்டரில் கேள்விகேட்டுள்ளார் .

இன்று ஒரு நாள் பயணமாக சென்னைக்கு வருகை தந்த மோடிக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.இதுகுறித்து சித்தார்த் பதிவிட்டுள்ள ட்விட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாம் அனைவரும் வலியுறுத்துகிறோம். இதில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். தமிழகமே ஒன்று கூடி ஒரே நோக்கத்திற்காக போராடுகிறோம். தமிழர்களே தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று கூறுவது ஒரு அவமானம் இல்லையா. இந்தியர்கள் இந்தியர்களை ஆன்ட்டி இந்தியன்ஸ் என்று சொல்வது போலநிறுகிறது என பதிவிட்டுள்ளார் சித்தார்த்.

மேலும் சென்னையில் நடக்கவிருந்த போட்டிகளை புனேவிற்கு மற்றப்படத்தியும் பற்றி ட்வீட் செய்திருந்த சித்தார்த் ipl மாற்றப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்,இதே போன்று மதுபான கடைகளை மூட முடியுமா?அடுத்து அரசியல் வாதிகள் நடத்தும் தொலைகட்சிகளை மூட முடியுமா?போராட்ட களங்களில் கட்சி கொடிகளை பறக்க விடுவதை நிறுத்த முடியுமா?இது போன்ற பல சகிக்க முடியாத விஷயங்கள் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.ஒன்றாக போராடுவோம்!விவசியிகளை காப்போம் என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.