ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய நடிகர் சித்தார்த்..! அசந்துபோன நடிகர்கள்.! என்ன சொன்னார் தெரியுமா

0
488
Siddharth

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அரசியல் பயணத்தை அறிவித்த நாள் முதல் அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தாலும் பல தரப்பிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய வண்ணம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிக்கரான சித்தார்த்தும் ரஜினிவை தாக்கி பேசியுள்ளார் .

rajini

தூத்துக்குடி போராட்டத்தில் காவல் துறையினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக நேற்று காலை ரஜினி தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட ஒரு இலைஞர் ரஜினியை பார்த்து நீங்கள் யார் ? இப்பொது எதற்கு எங்களை பார்க்க வந்தீர்கள் ? என்று சரமாரியான கேள்விகளை கேட்டார்.

இதனால் செய்வதறியாமல் ரஜினி சிரித்துக் கேடே அங்கிருந்து கிளம்பி வெளியே வந்து விட்டார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ரஜினி “காவல் துறையினர் துப்பாக்கிசூடு நடத்த காரணம், சமூக விரோதிகள் சிலர் முதலில் கலெக்டர் அலுவலகத்தை தாக்கி பின்னர் காவல் துறையினரையும் தாக்கியது தான்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினியின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவு வருகின்றனர். தற்போது சினிமா நடிகர் சித்தார்த் ரஜினியை தாக்கி பேசும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் கருது தெரிவித்துள்ளார் அதில் “அடுத்து இவர்கள் தூத்துக்குடியை இதனை ஆண்டுகளாக மாசுபடுத்தியது சமூக விரோதிகள் தான் என்று நம்மிடம் கூறுவார்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.