சிம்பு- வெங்கட் பிரபு பட டைட்டில் போஸ்டரில் இதை கவனித்தீர்களா.? எப்படி மிஸ் பண்ணீங்க.? பாருங்க புரியும்

0
1491
Maanaadu
- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிம்பு கூட்டணியில் புதிதாக வெளியாக உள்ள படத்திற்கு “மாநாடு” என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இன்று “ஜூலை 10 ” ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் வெங்கட் பிரபு .இந்த படத்தின் போஸ்ட்டரை பார்க்கும் போதே இது ஒரு அரசியில் சம்மந்தபட்ட படமாக இருக்கும் என்று தான் தெளிவாக புலப்படுகிறது.

-விளம்பரம்-

venkatprabhu - simbu

- Advertisement -

அதுமட்டும்மல்லாமல் இதற்கு முன்பெல்லாம் சிம்பு காதல் மற்றும் ரொமான்டிக் கதைகளை தான் தேர்தெடுத்து நடித்து வந்தார்.சமீபகாலமாக சிம்புவின் படம் அனைத்தும் சரியாக ஓடவில்லை.காதல் மையப்படுத்தி மட்டும் இவர் நடித்து வருவதால் படம் சரியாக மக்களிடத்தில் சேரவில்லை என்பது உண்மை. ஆனால், சமீப காலமாக அரசியல் சார்ந்து எடுக்கப்பட்டு வரும் படங்கள் நல்ல வெற்றியை பெற்று வருகிறது.

இதனால் சிம்பு அவரது திசையை மாற்றி அரசியல் சார்ந்த சமூக பிரச்சனையை கையில் எடுக்கிறாரா என்று தோன்றுகிறது.அரசியல் சார்ந்த படத்தில் மூலம் மக்கள்,ரசிகர்களை தன் திசை திருப்ப இப்படிப்பட்ட கதையை தேர்ந்தெடுத்திருக்கிறாரா என்பது கேள்விக்குறிதான்.

-விளம்பரம்-

படம் வெளியாவதற்கு முன்பாகவே சில அரசியில் காட்சிகள் இது போன்ற படங்களை இலவச ப்ரோமோஷன் செய்து படத்தை வெற்றி படமாக மாற்றி விடுகின்றனர். உதாரணமாக விஜய் நடித்த ‘மெர்சல் ‘படத்தை கூறலாம். அதே போல சமீபத்தில் வெளியான தமிழ் படம் 2 டீசரிலும் சில அரசியில் தலைவரை கிண்டல் செய்து வெளியான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பும் கூடியது.

வெங்கட் பிரபு பொதுவாக சஸ்பென்ஸ் கலந்த காமெடி படம் எடுப்பதில் அலாதியானவர்.ஆனால் இந்த போஸ்டரை பார்க்கும் பொது அரசியல் படமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.ஆனால் போஸ்டரின் கீழே ‘Venkat Prabu Politics’ என்று எழுதப்பட்டுள்ளது, இதை பார்க்கும் பொது அரசியல் கலந்த காமெடி படமாக இருக்குமோ என்ற சந்தேகமும் தோன்றுகிறது.

இன்று வெளியான “மாநாடு ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கொஞ்சம் உற்று கவனியுங்க, அரசியில் பிரமுகங்களான அம்மா ஜெயலலிதா, காந்தி,விஜயகாந்த, அம்பேத்கார்,அது மட்டும் இன்றி தி.மூ.கா. வின் சின்னமான சூரியின் பேனர் போன்றவர்களின் படங்களை காட்சி படுத்தியுள்ளனர்.தேவை இல்லாமல் எதற்கு அரசியல் முன்னணி தலைவர்களை முன்னிறுத்த வேண்டும்.? இதனால் இந்த படமும் அரசியல் சம்மந்தபட்ட படமாக தான் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த அணைத்து கேள்விகளுக்கும் இந்த படம் வெளியானால் மட்டுமே விடை தெரியும் என்பதால் கொஞ்சம் காத்திருந்து காணலாம்.

Advertisement