ரெட் கார்ட், ஓட்டு போட வராது குறித்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு- என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

0
423
- Advertisement -

தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு சிம்பு கொடுத்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது.

- Advertisement -

சிம்பு திரைப்பயணம்:

பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படத்தை இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படம் கன்னட மஃப்டி படத்தின் தமிழ் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

சிம்பு 48 படம்:

தற்போது சிம்புவின் 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி இருக்கிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மணிரத்தினம்- கமல் நடிக்கும் தக் லைப் நடிக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தார். கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணி:

உலகநாயகன் கமலஹாசனுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயின்ட் மூவிஸ், ஆர் மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தில் புகழ்பெற்ற நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமலஹாசனின் மகனாக சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது.

சிம்பு கொடுத்த பதிலடி:

இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, இந்த உலகத்திலேயே ரொம்ப கஷ்டப்படுகிற ஒரே ஆள் யார் என்றால் உண்மையை பேசுபவர் தான். நான் நிறைய பேசியிருக்கிறேன். ஷூட்டிங்கில் நான் பிஸியாக இருந்ததால் தான் ஓட்டு போட வர முடியவில்லை. அது ரொம்ப தவறான விஷயம் தான். இருந்தாலும் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வர அளவுக்கு நான் பெரிய ஆள் எல்லாம் கிடையாது. அதோடு எனக்கு ரெட் கார்டு கொடுத்ததாக பல சர்ச்சைகள் வந்திருக்கிறது. அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. அதைப் பேசி சரி செய்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement