தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார்.

பின் பல போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்த சிம்பு நடித்த மாநாடு படம் மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றது. தற்போது சிம்பு நடித்து உள்ள படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
தக் லைஃப் படம் :
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டு வருவதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பட குழுவினர் மும்முரமாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்திருக்கிறது. இதில் படகுழுவினர் அனைவரும் பங்கு பெற்றிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, நாசர் சாருடன் நான் பல படம் நடித்து இருக்கிறேன். இந்த படம் ரொம்பவே ஸ்பெஷல்.

இசைவெளியீட்டு விழாவில் சிம்பு:
அபிராமி மேடத்துடன் நடிப்பு இந்த படத்தில் கண்டிப்பாக மக்கள் மத்தியில் பேசப்படும். அசோக் செல்வன் எனக்கொரு தம்பி மாதிரி. அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. இன்னும் பெரிய இடத்திற்கு அவர் வருவார். திரிஷாவும் நானும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருந்தோம். நாங்கள் மீண்டும் சேர்ந்து நடிப்பதை பற்றி பலரும் எதிர்பார்த்தார்கள். ட்ரெய்லர் வந்ததும் பலருக்குமே ஷாக் தான். அவர் சொன்ன மாதிரி இன்னும் பல சர்ப்ரைஸ் இருக்கிறது. ரகுமான் சாரை சின்ன வயதில் இருந்து தொந்தரவு பண்ணியிருக்கிறேன்.
மணிரத்தினம் பற்றி சொன்னது:
எப்போதும் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன். பீப் சாங் வந்தபோது எனக்கு கஷ்டமான நேரம்.
அப்போ எனக்காக அவர் தள்ளி போகாதே பாடல் செய்திருந்தார். மேலும், மணி சார் அஞ்சலின்னு ஒரு படம் எடுத்திருந்தார். அந்த படம் பார்த்துவிட்டு நான் ரொம்பவே அழுதுட்டேன். நானும் இதே வயசு தான் ஏன் மணி சார் என்னை கூப்பிடவில்லை என்று சொன்னேன். அப்போது நான், இவர் நம்மை கூப்பிடவே மாட்டாரா? என்றெல்லாம் நினைத்தேன். காரணம், நான் வளர்ந்து நடித்தது எல்லாமே மாஸ், மசாலா படங்கள் தான். அந்த மாதிரியான நேரத்தில் எனக்கு ரெட் கார்டு கொடுக்குற மாதிரியான சூழலும் வந்தது. அந்த நேரத்தில் என்னை வைத்து படம் பண்ண எல்லோருமே பயந்தார்கள். எனக்கு பட வாய்ப்புகளுமே இல்லை. இயக்குனர் யாருமே என்கிட்ட கதை கூட சொல்ல வரவில்லை.
https://www.youtube.com/watch?v=BzvSx1yA_X0
வாய்ப்பு இல்லாத தருணம்:
அப்போதுதான் எனக்கு மணி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. நான் அவரிடம், உண்மையாகவே நீங்கள் தான் என்னை கூப்பிட்டீங்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், நான் தான் கூப்பிட்டேன் என்று சொன்னார். என்னை வைத்து படம் பண்ணுவதற்கு நம்பிக்கையாக கூப்பிட்டீங்க ரொம்பவே நன்றி சார். செக்க சிவந்த வானம் படம் மட்டும் கிடையாது. இன்னும் சில படங்களுக்கு கூப்பிட்டு என்னிடம் கதை சொல்லி இருக்கிறார். பொன்னின் செல்வன் படத்திற்கும் என்னை கூப்பிட்டார். ஆனால், அந்த நேரத்தில் சில காரணங்களால் என்னால் நடிக்க முடியவில்லை. தக்கலைப் படத்துக்கு முதலில் கூப்பிட்ட போது கெட்டப்பினால் என்னால் பண்ண முடியவில்லை, மறுபடியும் அந்த வாய்ப்பு கமல் சாரோடு அமைந்தது. கமல் சார் பத்தி நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கலாம் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்






