திருமணம் பற்றி சிம்பு அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து ஆண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.
சிம்பு திரைப்பயணம்:
பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி இருந்தது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படத்தை இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கி இருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தக் லைப் படம்:
இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். தற்போது கமல் நடித்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது.

சிம்பு படம்:
இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் தக் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரோடாக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் சிம்புவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=w_m2_oAOEOw
திருமணம் பற்றி சொன்னது:
அதற்கு சிம்பு, திருமணம் தப்பு கிடையாது. சரியான நபரை தேர்ந்தெடுப்பது தான் ரொம்ப முக்கியமான ஒன்று. இப்போது இருக்கும் காலகட்டத்தில் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மை ரொம்பவே குறைந்துவிட்டது. நீ இல்லைனா வேறொருவர் என்ற மனநிலையில் ஆணும் பெண்ணும் இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருக்கவே கூடாது. உங்களுக்கான சரியான நேரம் வரும்போது உங்களுக்கான சரியான நபர் கிடைக்கும் போது திருமணம் மகிழ்ச்சியாக நடக்கும் என்று கூறியிருக்கிறார்.






