2 நாள் மட்டும் நடித்து படத்திலிருந்து விலகிய சிவா.! ஆனால் படம் ஹிட்..! எந்த படம்..?காரணம் என்ன..?

0
1135
Mirchi-Siva

இயக்குனர் ஜெர்ரி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் “விசில் “. புதுமுக நடிகர் விக்ரமாதித்தன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் காயத்ரி, நடிகை ஷெரின் போன்றவர்கள் நடித்திருப்பனர். இந்த படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக கமிட் ஆனது வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மிர்ச்சி சிவா தானாம்.

Mirchi-Shiva

மிர்ச்சி சிவா “தமிழ் படம்” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் 2001 ஆம் ஆண்டு நடிகர் ஷாம் நடித்த “12B ” படத்தில் நடிகர் ஷாமிற்கு நண்பனாக ஒரு சில காட்சிகளில் தோன்றி இருந்தார். அதன் பின்னர் இவருக்கு இயக்குனர் ஜெர்ரி இயக்கிய “விசில்” படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தின் இரண்டு நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு பிறகு இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் நடிகர் சிவா. சமீபத்தில் இதற்கான காரணத்தை இந்த படத்தின் இயக்குனர் ஜெர்ரி தெரிவிக்கையில் “நடிகர் சிவா இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த போது என்னிடம் வந்து, நான் நிறைய கனவுகளோட இருக்கின்றேன். இந்தப் படத்தில் எனக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது மாதிரி தெரியவில்லை.

whistle

அதனால், நான் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறி விலகிட்டார். எங்களுக்கும் அவருடைய சூழ்நிலை புரிந்ததால் நான் அதற்கு ஒப்பு கொண்டு விட்டேன். தற்போது அவர் சொன்னதை போலவே தற்போது சினிமாவில் தனக்கென்ற ஒரு ட்ராக்கில் போய் கொண்டு இருக்கிறார் ” என்று கூறியுள்ளார்.