தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தற்போது சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சுமோ. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரியா ஆனந்த், யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் விடிவி கணேஷ் ரெஸ்டாரண்டில் ஹீரோ சிவா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் கடலில் Surfing செய்வதை தொழிலாகவும் வைத்திருக்கிறார். ஒருநாள் கடலுக்கு சிவா Surfing செய்ய போகும்போது எதச்சையாக கடலோர அலைகள் மூலம் அடித்து வந்த Yoshinori Tashiroவை சிவா பார்க்கிறார். Yoshinori Tashiro இறக்கவில்லை. உடனே சிவா, அவருக்கு முதலுதவியும் செய்து காப்பாற்றுகிறார்.
கண் விழிக்கும் போது Yoshinori Tashiro, தன் உயிரைக் காப்பற்றிய சிவாவை ஒரு கடவுளாக பார்க்கிறார்.
பின் Yoshinori Tashiro, சிவாவை விட்டு பிரியாமல் எந்நேரமும் அவருடன் இருக்கிறார். Yoshinori Tashiro ஒரு குழந்தை போலவே நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் இவர் ஒரு சுமோ வீரர் என்பதை சிவா கண்டுபிடிக்கிறார். இவரை மீண்டும் ஜப்பானுக்கு அனுப்ப வேண்டும் என்று சிவா அதற்கான முயற்சியிலும் இறங்குகிறார்.
கடைசியில் என்ன நடந்தது? Yoshinori Tashiro சுமோ போட்டியில் வென்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படத்தின் இயக்குனர் எஸ்.பி. ஹோசிமின் எடுத்த கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை கொண்டு சென்ற விதத்தில் தான் சுதப்பி இருக்கிறார். ஓரிடத்தில் கூட சுவாரசியமே
இல்லை. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் சரியாக இல்லை. முக்கிய கதாபாத்திரமாக இந்த படத்தில் Yoshinori Tashiro தான் இருக்கிறார்.
அந்த கதாபாத்திரம் கூட ரசிக்கும் படியாக இல்லை. இவர்களை அடுத்து படத்தில் வரும் சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், வி டிவி கணேஷ் உடைய கதாபாத்திரமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அவர்கள் பேசும் காமெடி எல்லாம் கடுப்பு ஏற்றும் அளவு இருக்கிறது. யோகி பாபு இந்த படத்திற்கு எதற்கு என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறார். சதீஷ் இந்த படத்தில் கேமியா ரோல். அது தேவையே இல்லை என்று தான் சொல்லணும்.
மேலும் படத்தில் நகைச்சுவையாவது ஓகேவா என்று பார்த்தால் நிறைய சுதப்பல் தான். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தினுடைய எடிட்டிங், டெக்னிக்கல் எல்லாமே ரொம்ப மோசமாக இருக்கிறது. ஒரு வழியாக படத்தை முடித்துப் பார்த்தால், என்னடா பண்ணி வச்சிருக்கீங்க, போதும் போங்கடா என்று திட்டும் அளவிற்கு படம் கடுப்பை ஏற்றி இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பிளஸ் என்றால் அது பின்னணி இசை மட்டும் தான். மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை. மொத்தத்தில் சுமோ ரொம்ப ரொம்ப மோசமான படமாக இருக்கிறது.
நிறை:
பின்னணி இசை ஓகே
கதைகளம் ஓகே
குறை:
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சரியில்லை
நிறைய காட்சிகள் சலிப்படைய வைத்திருக்கிறது.
எடிட்டிங், டெக்னிகல் எல்லாமே சுதப்பல்
நகைச்சுவையும் நன்றாக இல்லை
மொத்தத்தில் சுமோ – பார்வையாளர்களுக்கு பெரிய அடி