நடிகர் திலகம் சிவாஜி சொன்ன அட்வைஸ் குறித்து இயக்குனர் பாரதிராஜா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார். பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்திருந்தார். சிவாஜி என்பது நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன்.
சிவாஜி குறித்த தகவல்:
இன்றும் இவருடைய நடிப்பிற்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். கடைசியாக இவர் நடித்த படம் படையப்பா. இவருடைய மகன் பிரபு. இவர் தன் தந்தையைப் போல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் சினிமாவில் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி இறப்பு:
மேலும், பெயரும் புகழும் சம்பாதித்த சிவாஜி அவர்கள் தன்னுடைய 71 வயதில் 2001 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் இறந்தார். சிவாஜி கணேசன் இவ்வுலகை விட்டு போனாலும் யார் மனதை விட்டும் நீங்கவில்லை. அவருடைய படைப்புகளும் அவருடைய நினைவுகளும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் சிவாஜி குறித்து பாரதிராஜா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதிராஜா பேட்டி:
பாரதிராஜா, சிவாஜி கணேசனுக்கு வயதான பின்பு ஒரு முறை மாரடைப்பு வந்தது. அப்போது அவர் மருத்துவமனையில் இருந்தார். அவரை பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது அவரிடம் உடல்நிலை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், நான் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று மாரடைப்பு வந்துவிட்டது என்று சொன்னார். பின் திடீரென அவர், என்னிடம் நீ வீடு கட்டி விட்டாயா? என்று கேட்டார். அதற்கு நான், கட்டி விட்டேன் என்று சொன்னேன். உடனே அவர், பெரிய வீடா? இல்லை சின்ன வீடா? என்று கேட்டார்.

சிவாஜி சொன்ன அட்வைஸ்:
அதற்கு நான், சுமாரான அளவுதான் கட்டி இருக்கிறேன். எதற்கு கேட்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு சிவாஜி, தயவுசெய்து பெரிய வீடா கட்டிவிடாதே. எனக்கு மாரடைப்பு வந்த போது பிரபு, ராம் என்று கத்தி கத்தி கூப்பிட்டேன். யாருமே வரவில்லை. உடம்பு முடியாத நேரத்தில் அழைத்தால் உடனே வரும் அளவிற்கு வீடு இருந்தால் போதும். அந்த மாதிரி கட்டு என்று சொன்னதாக பாரதிராஜா கூறியிருக்கிறார்.






