தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் செய்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன், ஆயிரம் கோடி என்ற இலக்கை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு ஒரு படத்தை உருவாக்க முடியாது.
சிவகார்த்திகேயன் பேட்டி:
நான் ஏற்கனவே இதைப்பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறேன். நாங்கள் அமரன் படத்தை தயாரிக்கும் போது அது எவ்வளவு செலவாகும் என்பதை எல்லாம் நாங்கள் நினைக்கவில்லை. ஒரு படத்தினுடைய தரத்தை தவிர படத்தினுடைய டிக்கெட் விலை போன்ற சில விஷயங்களும் இருக்கிறது. அது ரொம்ப முக்கியம். நான் டிக்கெட் விலை அதிகரிப்பதை ஆதரிக்கவில்லை. ஆனால், பெங்களூர், மும்பைகளில் இருக்கும் டிக்கெட் விலைகள் போல் இங்கே இருந்தால் ஜெயிலர் படம் 800 கோடி, ஆயிரம் கோடி என்ற அந்தஸ்தை எளிதாக எட்டிருக்கும்.

தமிழ் சினிமா நிலை:
தமிழ் சினிமா வட இந்திய சந்தைகளில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் பெரும்பாலான தமிழ் படங்கள் நான்கு வாரங்களிலேயே ஓடிடியில் செல்கின்றது. ஆனால், மும்பையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள், ஒரு படம் திரையரங்கில் வெளியாகி குறைந்தது எட்டு வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வரவேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது. இந்த சிக்கலால் தான் அமரன் படம் வட இந்தியாவில் பரவலாக சென்றடையவில்லை.

தமிழ் சினிமா இலக்கு:
தமிழ் திரையுலகம் விரைவில் அந்த இலக்கையும் எட்டும். ஒருவரால் மட்டும் இதை செய்ய முடியாது. எல்லோரும் சேர்ந்து தமிழ் சினிமா அஸ்தஸ்தை உயர்த்தலாம். அதோடு தமிழ் சினிமா 1000 கோடி இலக்கை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் ஆயிரம் கோடி வசூல் என்ற சாதனை தமிழ் சினிமா நிகழ்த்தும், நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.






