சிவகார்த்திகேயனின் டீச்சர் இந்த அழகான பெண்ணா..! அவரே வெளியிட்ட புகைப்படம்

0
1324
Actor-siva

நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும் தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் தற்போது தனக்கென்று ஒரு தனிப்பட்ட இடத்தை பிடித்துள்ளார். சின்னத்திரையில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படுத்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

இவ்வளவு மிக பெரிய இடத்திற்கு சென்றும் இன்னும் அவர் எளிமையாக தான் இருக்கிறார் என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனை நிரூபிக்கும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் படித்த கல்லூரியில் அவருக்கு ஆசிரியையாக இருந்த ஒரு நபர் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள ஜே ஜே பொறியியல் கல்லோரியில் தான் இன்ஜினீயரிங் படித்துள்ளார். சமீபத்தில் இவர் படித்த கல்லோரியில் சிவகார்திகேயனுக்கு ஆசிரியையாக இருந்த ஹேமா சிவகுமார் என்பவர் நீண்ட நாள் கழித்து தனது மாணவனான நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹேமா’ஒரு சில நினைவுகள் பொக்கிஷம் போன்றது. என்னுடைய மாணவன் சிவ என்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். நான் கல்லூரியில் பார்த்த போது எப்படி இருந்தாரோ அப்படியே தான் இன்னமும் இருக்கிறார்’ என்று சிவகார்த்திகேயனின் எளிமையை புகழ்ந்து பேசி பதிவிட்டுள்ளார் சிவாவின் ஆசிரியை. இந்த தகவலை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் தங்களது ரசிகர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.