நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “சீமராஜா” திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சீமராஜா திரைப்படத்தை தொடர்ந்து “இன்று நேற்று நாளை” படத்தை இயக்கிய ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில்”சமர் ” படத்தை இயக்கிய இயக்குனர் திருவுடன் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவர்கள் முன் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் ,இயக்குனர் திரு இயக்கத்தில் எதாவது படம் நடித்து வருகிறாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. .
அந்த புகைப்படம் குறித்து இயக்குநர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளிகையில் , சிவகார்த்திகேயனுடன் நான் இருக்கும் புகைப்படம்குறித்து கேட்பவர்களுக்கு, நாங்கள் இருவரும் இணைந்து ஆவணப்படம் ஒன்றை இயக்க உள்ளோம். நல்ல நோக்கத்திற்காக இந்தப் படம் அமையும். மற்ற தகவல்கள் விரைவில். நன்றி என்று பதிவிட்டிருந்தார்.
For those asking about my pic with @Siva_Kartikeyan brother.
We did a documentary for a good cause.Details soon..
Thank you!!— Thiru (@dir_thiru) August 17, 2018
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் குறும் படம் குறித்து சமீபத்தில் வந்த தகவலின்படி பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் திரு என்று தெரியவந்துள்ளது.