சிம்பொனி நிகழ்ச்சி : இளையராஜாவை நேரில் சந்தித்து சிவக்குமார் செய்த வேலை – என்னனு நீங்களே பாருங்க

0
58
- Advertisement -

இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து சிவக்குமார் கொடுத்து இருக்கும் பரிசு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசை பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் லண்டன் மாநகரில் புதிய சிம்பொனி இசை கோர்வையை இளையராஜா அவர்கள் அரங்கேற்றம் செய்து இருக்கிறார். சிம்பொனி என்பது மேற்கத்திய இசை வடிவம். இதை வெறும் 34 நாட்களில் இளையராஜா உருவாக்கி இருக்கிறார். இது இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும். இதன் மூலம் தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவி இருக்கிறது.

- Advertisement -

இளையராஜா சிம்பொனி:

இதற்காக முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். பின் இது தொடர்பாக தெரிவித்த பேட்டியில் இளையராஜா, தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அப்போலோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றுகிறேன். நம் பெருமையை பறைசாற்ற லண்டன் செல்கிறேன். இது என்னுடைய பெருமை கிடையாது. நம்முடைய பெருமை, தமிழ்நாட்டின் பெருமை, இந்தியாவின் பெருமை.

இளையராஜா பேட்டி:

நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான் என்று கூறி இருந்தார். இதை அடுத்து லண்டனில் சிறப்பாக இருந்தார். இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு இளையராஜா சென்னைக்கு திரும்பி இருந்தார். இதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இளையராஜாவின் திரை இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் அரசின் சார்பாக விழா ஏற்பாடு செய்து இருக்கிறார். இது தொடர்பாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

மோடி வாழ்த்து:

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். மேலும், இளையராஜாவை நேரில் அழைத்து மோடி வாழ்த்து சொல்லி இருந்தார். பின் இது தொடர்பாக இளையராஜா போட்ட பதிவில், மதிப்பிற்குரிய பிரதமர் மோடிஜியை சந்தித்து எனது சிம்பொனி 01 ‘Valiant’ குறித்தும் பல விஷயங்களை குறித்தும் உரையாடி அவரது வாழ்த்தையும் ஆதரவையும் பெற்றுக் கொண்டேன் என்று கூறி இருந்தார்.

சிவக்குமார் கொடுத்த பரிசு:

இது அடுத்து பிரபலங்கள் பலருமே இளையராஜாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மூத்த் நடிகர் சிவக்குமார் அவர்கள் இளையராஜாவை சந்தித்து பரிசு கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, சிவகுமார் தன்னுடைய மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோருடன் இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு தங்கச் சங்கிலியையும், மலர் கொத்தும் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement