46 வருடம் கழித்து தனது பழைய வீட்டை மனைவிக்கு காண்பித்த சிவகுமார் – இது தான் அந்த வீடு.

0
4373
sivakumar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சிவகுமார். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். சிவகுமார் அவர்கள் மிகச் சிறந்த ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் சிவகுமார் தனது தொடக்க காலத்தில் வாழ்ந்த வீடு சிதைந்து உள்ளது. தன்னுடைய பழைய வீட்டின் முன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து பழைய நினைவுகளை மனம் திறந்து கூறி உள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியது, 1958 -1965 ஆண்டு வரை சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்தோம். எனது அத்தனை ஓவியங்களும் ஓவியக்கல்லூரியில் 6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம். இந்தியாவில் டெல்லி முதல் கன்யாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500/- குறைந்த தேவைகளோடும், உயர்ந்த லட்சியங்களோடும் வாழ்ந்த பொன்னான நாட்கள்.

- Advertisement -

சென்னையில் 55 வருஷத்துக்கு முன்னாடி நான் வாழ்ந்த வீடு. இந்த வீட்டை பற்றி பேசினால் போதும் அந்த வீடு இன்னமும் இருக்காப்பா? பார்க்கணும் என்று சூர்யாவும் கார்த்தியும் கேட்டுக்கிட்டே இருப்பார்கள். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் இரவு 9 மணிக்கு முகக்கவசம் எல்லாம் போட்டு கொண்டு அங்கே போனோம். வீட்டைக் கண்டுபிடிச்சுட்டோம். இரவில் பார்த்துட்டுத் திரும்பிட்டோம். பகல் வெளிச்சத்தில் ஒரு நாள் போய் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

நேற்று என் மனைவி அந்த வீட்டைப் பார்க்கணும்னு சொன்னாங்க. கல்யாணம் ஆகி 46 வருஷம் ஆகி விட்டது. இன்னமும் அவங்க அந்த வீட்டைப் பார்த்ததில்லை. சரி போலாம் என்று கிளம்பிப் போனோம். அந்த வீடு அப்படியே தான் இருக்கு. யாரும் குடியில்லை. பூட்டிக் கிடக்குது. ஒரே ஒரு போட்டோ எடுத்துக்க ஆசை வந்தது. பிறகு போட்டோ எடுத்தேன். இது என்னுடைய தாஜ்மஹால் என்று சொல்வேன் என்று நெகிழ்ச்சியுடன் பழைய நினைவுகளை பகிர்ந்தார் சிவகுமார்.

-விளம்பரம்-
Advertisement