இந்தியாவில் மிகப் பிரபலமான திரைப்பட நடிகர்களில் ஒருவர் சோனு சூட். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். 1999ஆம் ஆண்டு தமிழ் சினிமா மூலம் தான் இவர் நடிகனாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். இந்நிலையில் நடிகர் சோனு சூட் அவர்கள் 20 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சோனு சூட் சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அறக்கட்டளை ஒன்று தொடங்கி பல உதவிகளை செய்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மும்பை, லக்னோ, கண்பூர், ஜெய்ப்பூர், குருகிராம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் சோனு சூட்டுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிந்த பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் சோனு 20 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் பாருங்க : ன் வீட்டு கன்னுகுட்டி என்னோட மல்லு கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி – மீம் மெட்டிரியலாக மாறிய விஜய் வீட்டு பஞ்சாயத்து.

Advertisement

இந்த வரி ஏய்ப்புக்காக அவர் பல போலி நிறுவனங்கள் இருந்து கடன் வாங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதோடு அந்த போலி நிறுவனங்களுக்கு சோனு சூட் அவர்கள் பணத்தை கொடுத்து அந்த பணத்தை கடன் என்ற பெயரில் மீண்டும் அவரே வாங்கி பதிவு செய்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் லக்னோவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சோனு சூட் பங்குதாரராக உள்ள அந்த நிறுவனம் 65 கோடி ரூபாய் மதிப்புக்கு போலி ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருப்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது. சோதனையின் போது அந்த இடத்திலிருந்து ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆக கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும்,சூட் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து 18 கோடி ரூபாய் நிதி உதவி வந்ததாகவும் அதில் வெறும் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மட்டும் நலத்திட்டங்களுக்கு செலவழிக்க பட்டதாகவும் மீதி பணம் அறக்கட்டளை வங்கிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் சோனு சூட் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தான் இந்த அதிரடி சோதனை நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சோதனை உள்நோக்கம் கொண்டது என மகாராஷ்டிர ஆளும்கட்சி சிவசேனாவும், ஆம் ஆத்மியின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சோனு சூட் அவர்கள் தரப்பில் எந்த ஒரு பதிலும் வெளியாகவில்லை.

Advertisement
Advertisement