இலவசமாக மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல 10 சொகுசு பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்த ரஜினி பட வில்லன்.

0
1812
sonu
- Advertisement -

கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்தியாவை பொறுத்த வரை ஆரம்பத்தில் இருந்த கொரோனாவின் தாக்கம் தற்போது தலை விரித்து ஆடுகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள்.

- Advertisement -

அந்த வகையில் சந்திரமுகி, ஒஸ்தி போன்ற படங்களில் வில்லனாக நடித்த சோனு சூத் மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். தமிழில் 1999-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கள்ளழகர்’. ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த் நடித்திருந்த இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சோனு சூத். அதன் பின்னர் இவர் பல்வேறு மொழி படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

Coronavirus Mumbai Sonu Sood Opens His Juhu Hotel For Medical ...

-விளம்பரம்-

பாலிவுட்டில் பிரபல நடிகரான இவர், சமீபத்தில் இருந்த மக்களுக்கு உதவும் வகையில் மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளார். ஏற்கனவே நடிகர் சோனு சூட் மும்பையில் இருக்கும் அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement