சூரியின் வேட்டி காமெடி தெரியுமா..? நகைச்சுவை சம்பவம் – வீடியோ உள்ளே !

0
628

சினிமாவில் பல நடிகர்கள் கஷ்டப்பட்ட பிறகே சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கின்றனர்.நடிகர் விஜய் சேதுபதி, மா க பா ஆனந்த் ,யோகி பாபு போன்ற பல நடிகர்களும் கூத்து பட்டறையில் இருந்தே தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தனர். மேலும் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்கு முன்பாக அவர்கள் பல இன்னல்களை சந்தித்தே பின்னர் ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிறுக்கின்றனர்.

அதே போன்று சமீபத்தில் நடிகர் சூரி தான் சினிமாவுக்கு நடிப்பதற்கு முன்பு தன் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை கூறியுள்ளார் .விஜய் டிவி யில் சமீபத்தில் காமெடி அவார்ட்ஸ் என்ற விருது வழங்கும் விழா நடைபெற்றது அதில் பங்குபெற்ற சூரியிடம் பிரபால தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி நீங்க்ள் சினிமாவில் நடிக்க துவகிங்கும் போது ஏதோ வேட்டி கதை இருக்கிறதாமே என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு சிரித் துக் கொண்டே பதில் கூறிய சூரி பின்னர் சுவாரசியமான சம்பவம் ஒன்றை தெரிவித்தார். சினிமாவிக் வாய்ப்பு தேடி அலைந்த சூரிக்கு அவரது நண்பர் வெற்றி என்பவர் தான் மிகவும் உதவியாக இருந்து வந்தாராம் .அவர் சென்னைக்கு நடிக்க வாய்ப்பு தேடி வந்த போது அவருக்கு தங்க வாடகை வீடு கூட அவர் தான் எடுத்து தந்தாராம். ஒரு சமயம் ஒரு வாடகை வீட்டில் குடிருந்த போது இயக்குனர் பாலு மகேந்திராவின் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம்.

soori

மேலும் அந்த படத்தில் நடிப்பதற்காக இருவரும் வேட்டி அணிந்து வர வேண்டும் என்று கூறியிருந்தார்களாம் .ஆனால் அப்போது அவர்களிடம் வேட்டி இல்லாததால் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு வந்திருந்த அவரின் விருந்தாளி ஒருவர் வேட்டி கட்டிக்கொண்டு வெளியில் படுத்திருந்தாராம். உடனே சூரியும் அவரது நண்பரும் லாவகமாக அவருக்கே தெரியாமல் அவர் கட்டி இருந்து வேட்டியை திருடிக்கொண்டு பாலு மகேந்திராவின் ஷூட்டிங் கிர்க்கு போய் சேர்த்துள்ளனர்.

ஆனால் அங்கே இருவருக்குமே வேட்டி தேவைப்பட்ட அவர்கள் திருடிவந்த அந்த ஒரு வேட்டியை கிழித்து ஆளுக்கு பாதி வேட்டியை கடிக்கொண்டார்களாம்.இதனால் அவர்கள் கட்டி இருந்த வேட்டி கோவணம் போன்று கட்சியலித்ததால் அவர்களை ஷூட்டிங்கில் சேர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை கேட்டதும் அரங்கத்தில் இருந்த அனைத்து காமெடி நடிகர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.