வைரலாகும் சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படம் – வேற லெவலில் உடலை ஏற்றியுள்ள சூரி. வெற்றி மாறன் படத்திற்காகவா ?

0
1299
soori

தமிழ் சினிமாவில் காமெடியனாக நுழைந்து பின்னர் ஹீரோ வானவர்கள் பலர் இருக்கிறார்கள் கவுண்டமணி செந்தில் துவங்கி விவேக் வடிவேலு வரை பலரும் காமெடியனாக நடித்து பின்னர் ஹீரோவாக நடித்தவர்தான் அந்த வகையில் தற்போது சூரியும் ஹீரோவாக களமிறங்குகிறார் அதுவும் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்தியாவிலேயே படப்பிடிப்பு நடத்தும் வகையில் தற்போது புதிய கதைக்களத்தை படக்குழு உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுரன் படத்திற்கு பின்னர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தில் முதலில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஒரு கவிதையை மையமாக வைத்து, இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டனர். அத்திட்டம் கைவிடப்பட்டு, மீரான் மைதீன் எழுதிய ’அஜ்னபி’ என்ற நாவலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை உருவாக்கும் வேலையில் இறங்கினர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் சூரி சிக்ஸ் பேக் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் வெற்றிமாறன் படத்திற்காகத்தான் சூரி உடலை தயார் செய்து வருகிறாரா என்று எதிர்பாத்து வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் சூரி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக் வைத்து ரசிகர்களை அசர வைத்தார்.

https://www.instagram.com/reel/CD3zZqzhcPu/?utm_source=ig_embed&utm_campaign=loading

எனவே கண்டிப்பாக வெற்றிமாறன் படத்திலும் சூரிக்கு சிக்ஸ் பேக் காட்சிகள் இருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.சூரி படத்தை முடித்தவுடன்தான், சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவி எடுக்கப்படும் படமாகும். ‘அசுரன்’ படத்தைத் தயாரித்த தாணுவே, இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement