சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த போதும் ரோட்டில் இருந்து வந்த சாமானியன் குரலை கேட்டு சூரி செய்த விஷயம்

0
269
- Advertisement -

கொட்டுக்காளி படத்தினுடைய விழாவில் நடிகர் சூரி செய்து இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. இவர் சீரியலில் தான் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் ‘நினைவிருக்கும் வரை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தாலும் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

-விளம்பரம்-

அந்த படத்தில் இவர் புரோட்டா சாப்பிட்டதன் மூலம் தான் புரோட்டா சூரி என்றே பெயர் வந்தது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது தன்னுடைய விடாமுயற்சினால் இவர் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். மேலும், இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோ ஆனார். இந்த படத்தில் விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

சூரி திரைப்பயணம்:

இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஜிவி அறிமுகமாகி இருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இயமைத்திருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதல் படமே சூரிக்கு மிக பெரிய பெயரை வாங்கி தந்தது.

சூரி நடிக்கும் படம்:

இதை அடுத்து தற்போது ‘விடுதலை 2’ படம் உருவாகி வருகிறது. அதன் பின் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியிருந்த ‘கருடன்’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. தற்போது சூரி நடித்து இருக்கும் படம் ‘கொட்டுக்காளி’.

-விளம்பரம்-

கொட்டுக்காளி படம்:

இந்த படத்தை இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே கூழாங்கல் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொட்டுக்காளி படத்தை சிவகார்திகேயன் தயாரித்து இருக்கிறார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்கள் மத்தியிலும் பேராதரவையும் விருதுகளையும் வென்றிருக்கிறது. இந்தப்படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

சூரி செய்த விஷயம்:

இந்த படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடை கொண்டு வருகிறது. அந்த வகையில் கொட்டுக்காளி படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்று இருக்கிறது. அதற்கு நடிகர் சூரி அவர்கள் சிவப்பு கம்பளத்தில் பல கேமராக்களுக்கு முன்பு கம்பீரமாக நடந்து வந்தார். அப்போது சாலை ரோட்டில் இருந்து வந்த சிறுவன் குரலை கேட்டு ஒரு நிமிடம் நின்று கையசைத்து விட்டு, நல்லா படிக்கிறீங்களா ? என்று சூரி விசாரித்து சென்றார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Advertisement