கஜா புயலால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சூரி செய்த உதவி..!என்ன வாங்கி கொடுத்தார் தெரியுமா..!

0
508
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர்.

-விளம்பரம்-

அதுபோக திறைத்துரையை சேர்ந்த பல்வேறு கலைஞ்சர்களும் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளுதவியையும் செய்தனர்.அதில் விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என பலரும் உதவி செய்தனர்.

- Advertisement -

பல்வேறு நடிகர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்து வரும் நிலையில் காமடி நடிகர் சூரியும் நிதியுதவியிம் பொருளுதவியும் அளித்துள்ளார். அதுபோக புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள செருவாவிடுதி பகுதிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

அப்போது மூதாட்டி ஒருவர் சூரியை கட்டி தழுவி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர் சூரியிடம் கதறிய செருவாவிடுதி பாட்டி “புயல்ல என் போன் தொலைஞ்சதால பேரன்கிட்ட பேச முடியலை” என்று கூறியுள்ளார். அதன் பின் சென்னை போன சூரி, ஒரு செல்போனும் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.சூரியின் இந்த செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

-விளம்பரம்-


Advertisement