காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க லாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம் அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயகின்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தமிழில் விஜய் அஜித் சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் சூரி. மேலும், ஆரம்பத்தில் இவரது காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அதன் பின்னர் இவரது காமெடி ரசிகர்களுக்கு கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தி விட்டது.
இதையும் பாருங்க : டாஸ்க் என்ற பெயரில் கடுப்பேத்தும் பிக் பாஸ்.! பேசாம தெலுகு பிக் பாஸிற்கு மாறிடலாம் போல.!
நடிகர் சூரிக்கு பெரும்பாலும் சில ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டது .திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகளும் மற்றும் ஒரு மகனும் பிறந்தனர்.சூரி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ராலும் அவரது குடும்ப நபர்கல் யாரையும் அழைத்து வருவது இல்லை.
இந்த நிலையில் நேற்று சூரி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனது மகள் மற்றும் மகன் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சூரி.